ஶ்ரீ ஆர்ச் மீடியா சார்பில் சக்கரா மற்றும் ராஜ் தயாரிப்பில் எம் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’நாடு’.
மலைவாழ் மக்களின் வாழ்வையும் அவர்கள் அடிப்படைத் தேவைகளுக்கும் கூட எப்படிப்பட்ட சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்ற எதார்த்தத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கும் இப்படத்தில் நாயகனாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் நடித்திருக்கிறார். நாயகியாக மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க கொல்லிமலையில் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு சத்யா இசையமைத்திருக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். பி.கே.படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
‘எங்கேயும் எப்போதும்’ பட புகழ் சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...