குஜராத் மாநிலத்தில் விரைவில் வர உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் மேற்கொள்ளும் பிரச்சாரத்தில் தனுஷ் நடிகர் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆளும் பாஜக கடும் முயற்சிகளை தொடங்கிவிட்டது. அதே சமயம், காங்கிரஸும் எப்படியாவது குஜராத்தை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 'இந்தியா ஒளிர்கிறது' என்ற பிரச்சாரம் முன்வைக்கப்பட்டதை போல இப்போது, பா.ஜ.க சார்பில் 'விகாஸ் கான்டோ தயோ ச்சே' என்ற பிரச்சாரம் முன் வைக்கப்பட்டுள்ளது. 'விகாஸ் கான்டோ தயோ ச்சே' என்றால், அதி பயங்கரமாக வளர்ச்சி இருக்கிறது என்பது பொருள்.
இந்த வாசகத்திற்கு எதிராக, தனுஷின் ”வொய் திஸ் கொலவெறி கொலவெறி...” என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து காங்கிரசார் தங்களது பிரச்சாரங்களில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் தனுஷ் தோன்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. 'விகாஸ் கான்டோ தயோ ச்சே' என்று ஆரம்பிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள அந்த பாடலில், ரோடு இல்லை, பிசினஸ் இல்லை, வரிக்கு மேல் வரி, வேலை வாய்ப்பு இல்லை என்பது போன்ற பாடல் வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது குஜராத் சோஷியல் மீடியாக்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
தனுஷின் 3 படத்தின் இடம்பெற்ற இந்த பாடல் தமிழக மட்டும் இன்றி, இந்தியாவையும் தாண்டி உலக அளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...