Latest News :

நடிகை திரிஷா விவகாரம்! - நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம்
Monday November-20 2023

வில்லன், கதாநாயகன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மன்சூர் அலிகான், நடிகராக மட்டும் இன்றி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். மேலும், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு தைரியமாக குரல் கொடுக்கும் நபர்களில் முக்கியமானவராக இருப்பதோடு, தனது கருத்துக்களை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பேசக்கூடியவராகவும் இருக்கிறார்.

 

இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நடிகை திரிஷாவை தவறாக பேசிவிட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், மன்சூர் அலிகானுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

 

‘சரக்கு’ பட பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகர் மன்சூர் அலிகான், இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள மறுப்பு செய்தியில், “அய்யா பெரியவர்களே, திடீர்னு திரிஷாவை நான் தப்பா பேசிவிட்டதாக வந்த செய்தியை என் பொண்ணு, பசங்க எனக்கு அனுப்பினாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில், நான் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஒரு பிரபல கட்சி சார்பாக போட்டியிடப்போவதாக அறிவித்த வேளையில், வேண்டும் என்றே எவனோ கொம்பு சீவி விட்டிருக்கானுங்க. உண்மையில் அந்த பொண்ண உயர்வாகத்தான் சொல்லியிருக்கிறேன்.

 

அனுமாரு சிரஜ்சீவி மலையை கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. அந்த அதங்கத்த காமெடியாக சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நினைத்தால், நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு அஞ்சுபவனா?

 

திரிஷாவிடம் தப்பா வீடியொவை காட்டியிருக்காங்க. அய்யா, என் கூட நடிச்சவங்களாம் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்னு ஆயிட்டாங்க, பல கதாநாயகிகள் பெரிய தொழில் அதிபர்களை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டாங்க. மேலும், லியோ பட பூஜையில் என் பொண்ணு தில்ரூபா, உங்களோட பெரிய ரசிகை என்று நான் திரிஷாவிடமே சொன்னேன்.

 

இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும், 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத கொடுப்பவன், எல்லாருக்கும் தெரியும், சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என் கிட்ட வேகாது. திரிஷாவிடம் தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காணூங்கனு தெரியுது.

 

உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா....” என்று தெரிவித்துள்ளார்.

 

மன்சூர் அலிகான் பேசிய ஒரிஜினல் வீடியோ இதோ,

 

Related News

9354

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

‘மாண்புமிகு பறை’ திரைப்படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!
Monday November-10 2025

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...

’ரெட்ட தல’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Monday November-10 2025

பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...

Recent Gallery