இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது!
Wednesday November-22 2023

பிரபல திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில்  'விஸ்காம்' எனப்படும் காட்சித் தொடர்பியல் துறையின்  ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் திரையுலகில் தன் தனித்தவமான படங்களைத் தன் பாணியில் இயக்கி, தனக்கென முத்திரை பதித்து சாதனை படைத்த புரட்சிஇயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் வேந்தர் திரு ஏ.சி.சண்முகம் அவர்கள் 'திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் 'விருதினை வழங்கினார்.

 

விருது வழங்கும் முன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் திரையுலகச் சாதனைகள் குறிப்பிடப்பட்டு விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அருண்குமாரும் உடன் இருந்தார்.  இவ்விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி திருமதி ஷோபா சந்திரசேகரும் கலந்து கொண்டார்.

 

SAC an Shoba Chanrasekar

Related News

9358

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery