Latest News :

’சூரகன்’ படத்தை ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் - நாயகன் கார்த்திகேயன் நம்பிக்கை
Wednesday November-22 2023

தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் (3rd Eye Cine Creations) சார்பில், வி.கார்த்திகேயன் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சூரகன்’. சதீஷ் கீதா குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகியாக சுபிக்‌ஷா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். வில்லனாக வின்செண்ட் அசோகன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜிவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி, டேஞ்சர் மணி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், கலைமாமணி ஸ்ரீதர், தியா, ஹாசினி பவித்ரா, தர்மா, விக்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

சதீஷ் கீதா குமார் மற்றும் ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். கு.கார்த்திக் மற்றும் திரவ் பாடல்கள் எழுத, ராம் சுதர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். தினேஷ் மோகன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

 

வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான கார்த்திகேயன், “சூரகன் டிரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் முன் அறிமுகப்படுத்துவது எங்களுக்குப் பெருமை. இந்த படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர். அசோகன் சார் சொன்னது போல் மனதளவிலும் நாங்கள் அனைவருமே விஜயகாந்த் சார் போல் தான் கடினமாக உழைத்தோம். இந்த படத்தில் எல்லோருமே அவர்கள் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். டேஞ்சர் மணி சார் எல்லாம், என்னைப் புதுமுகமாக நினைக்காமல், எனக்காக நிறைய மெனக்கெட்டு உழைத்தார்.  பணம் மட்டும் எல்லாவற்றையும் செய்துவிடாது, அன்பும் உழைப்பும் நம்பிக்கையும் தான் ஒரு விஷயத்தை உருவாக்கும். அது எங்கள் டீமிடம் இருந்தது. அச்சு ராஜாமணி அருமையான இசையை தந்துள்ளார். தியேட்டரில் கண்டிப்பாக இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். டிசம்பர் 1 திரையரங்குகளில் இப்படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. இங்கு வந்து எங்களை வாழ்த்திய எங்கள் டீமுக்கு ஆதரவாக இருந்த தனஞ்செயன் சாருக்கு நன்றி.” என்றார்.

 

நடிகர் வின்சென்ட் அசோகன் பேசுகையில், “சூரகன் படத்தில் ஒரு வில்லன் ரோல், இயக்குநர் கதை சொல்லும்போதே, தெளிவாக இருந்தார். இப்போது வரும் இயக்குநர்கள் வில்லனுக்கும் அழுத்தமான கதாபாத்திரம் தருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் சதீஷ் எனக்கு இந்த பாத்திரத்தை தந்ததற்கு நன்றி. அவர் க்ளீன் ஷேவ் தான் வேண்டும், நீங்கள் இப்படித் தான் இருக்கனும், என ஒவ்வொன்றிலும் தெளிவாக எல்லாம் சொல்லி நடிப்பை வாங்கினார். அது எனக்குப் பிடித்திருந்தது. ஹீரோ ஃபைட் செய்ததை பார்த்த போது, எனக்கு விஜயகாந்த் சார் ஞாபகம் வந்தது. ஹீரோ நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் பேசப்படும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

Sooragan

 

இயக்குநர் சதீஷ் கீதா குமார்  பேசுகையில், “இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் அனைவரும் மிக கடுமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். இது ஒரு ஆக்சன் படம் மணிக்கு சிறப்பு தேங்ஸ். வழக்கமாக ஆக்சன் காட்சிகளை நானே வடிவமைப்பேன் ஆனால் அதையெல்லாம் திரையில் கொண்டு வர மணி மிக கடினமாக உழைத்துள்ளார். சஸ்பெண்டில் இருக்கும் காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டு கிடக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற முயல்கிறார், அதில் அவருக்கு வரும் பிரச்சனைகள் என்ன என்பது தான் படம். இந்த படத்தில் யாருக்கும் ஓய்வே தராமல் வேலை வாங்கியிருக்கிறேன் அதற்காக இப்போது நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கார்த்திகேயனும் நானும் நண்பர்கள். ரொம்ப காலமாக பேசித்தான் இந்தப்படத்தை உருவாக்கினோம். ஒரு ஆக்சன் படம் என்றாலும் கார்த்திகேயன் தற்காப்பு கலைகள் கற்றுக் கொண்டவர் என்பதால் ஈஸியாக இருந்தது. டேஞ்சர் மணியும் ஆக்சன் நன்றாகப் புரிந்து கொண்டதால், இந்த படம் எளிதாக நடந்தது. அச்சு ராஜாமணி கதை சொன்ன போதே உற்சாகமாக ஒப்புக்கொண்டு 4 பாடல்களை தந்துள்ளார். சுபிக்‌ஷா நல்ல ரோல் செய்துள்ளார். வின்சென்ட் அசோகன் வித்தியாசமான வில்லன் ரோல் செய்துள்ளார். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “கார்த்திகேயன் ரொம்ப ஆக்டிவாக இருப்பார், எதையுமே சுறுசுறுப்பாகச் செய்வார். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஒரு நல்ல கண்டன்ட் கொடுத்தால் கண்டிப்பாக இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள். நல்ல படம் கொடுப்பது மட்டுமே நம் கடமை. அதை மட்டும் நாம் செய்தால் போதும். இந்தப் படம் டிரெய்லர் பார்க்கவே நன்றாக இருக்கிறது படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். கார்த்திகேயன் முதன்முதலில் ஆக்சனில் இறங்கியிருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள். ” என்றார்.

 

கலை இயக்குநர் தினேஷ் மோகன் பேசுகையில், “இது என்னுடைய நான்காவது திரைப்படம். இயக்குநர் சதீஷ் சாருக்கு நன்றி. அவரும் நானும் நீண்ட நாள் நண்பர்கள், அவரிடம் இந்தக் கதையைக் கேட்ட போதே மிகவும் பிடித்திருந்தது. இதற்காக மற்ற பட வாய்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு மிகக் கவனமெடுத்து, மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.

 

ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி  பேசுகையில், “வாய்ப்பு தந்த இயக்குநர் சதீஷ் சாருக்கு நன்றி. இந்த படத்தில் முழு உழைப்பைத் தந்து, டூப் இல்லாமல் நடித்த கார்த்திகேயன் தோழருக்கு நன்றி. அவரது உழைப்பு கண்டிப்பாக பேசப்படும். தயாரிப்பு தரப்பில் இப்படத்தில் கேட்ட அனைத்தையும் தந்தார்கள். விஷுவல்கள் நன்றாக வந்துள்ளது. படத்தில் அனைவரும் மிகக் கஷ்டப்பட்டு  வேலை பார்த்தனர். அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார். 

 

அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த, பரபரப்பான திரைக்கதையோடு கூடிய ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் நிறைந்திருக்கும் கமர்ஷியல் படம் இந்த ‘சூரகன்’ என்பதை டிரைலர் நிரூபித்துள்ளது.

Related News

9360

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery