Latest News :

கவனம் ஈர்க்கும் இயக்குநர் ராஜு முருகனின் ‘பராரி’ பட முதல் பார்வை போஸ்டர்!
Friday November-24 2023

'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ’பராரி’. ராஜு முருகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய எழில் பெரியவேடி இயக்கும் இப்படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ படத்தில் நாயகனாக நடித்த ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் புதுமுகங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு சுமார் 6 மாதங்கள் முறையான நடிப்பு பயிற்சி கல்வி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். 

 

மேலும், படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலான நடிகர்கள் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைத் துறை, டெல்லி நேஷனல் ஸ்கூல் டிராமா, பெங்களூரு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா ஆகியவற்றில் முறையான நடிப்பு கல்விப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். மேலும், அவர்களில் சிலர் பிஎச்.டியும் படித்துள்ளனர்.

 

‘பராரி’ என்பது தங்கள் சொந்த இடங்களில் இருந்து, பல்வேறு இடங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கும் வார்த்தை என்று விளக்கம் அளித்துள்ள படக்குழு, திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்கல் வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும் பேசுவது தன் படத்தின் கதை, என்றனர்.

 

சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமகால  அவலங்களை  பேசுவதோடு, சாதி மதம் மொழியை வைத்து அரசியல் செய்யும்  இந்த மானுட சமூகத்தை அறத்தோடு கேள்வி கேட்கும் விதமாகவும் உருவாகியுள்ள இப்படம் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள், பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 45 நாட்களுக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

 

இந்த நிலையில், ‘பராரி’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். அரை நிர்வாணத்துடன் நாயகனும், அவர் அருகில் கிழிந்த ஆடையுடன் நாயகியும் உடல் முழுவதும் காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் உட்கார்ந்திருக்க, அவர்களை சுற்றி மக்கள் கூட்டம் வேடிக்கை பார்ப்பது போன்ற முதல் பார்வை போஸ்டர் கவனம் ஈர்த்திருப்பதோடு, எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் ஆர்.டி.எக்ஸ் படத்தொகுப்பு செய்ய, உமா தேவி பாடல்கள் எழுதியுள்ளார். ஏ.ஆர்.சுகுமாரன் கலை இயக்குநராக பணியாற்ற, எஸ்.அழகிய கூத்தன் மற்றும் சுரேன்.ஜி ஒலி வடிவமைப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். ஃபயர் கார்த்தி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, அபிநயா கார்த்திக் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Related News

9367

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

‘மாண்புமிகு பறை’ திரைப்படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!
Monday November-10 2025

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...

’ரெட்ட தல’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Monday November-10 2025

பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...

Recent Gallery