Latest News :

மலையாளத் திரையுலகின் மிகப்பெரிய முயற்சியாக உருவாகியுள்ள ‘தி கோட் லைஃப்’! - ஏப்ரல் மாதம் வெளியாகிறது
Thursday November-30 2023

இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ‘தி கோட் லைஃப்’. (The Goat Life) மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், அமலா பால், கே.ஆர்.கோகுல் மற்றும் பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி, ரிக்காபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

விஷுவல் ரொமான்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை, தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். 

 

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். தரமான தயாரிப்பு, அழகியல் கூறுகள், கதைசொல்லல், மற்றும் நடிகர்களின் நடிப்புத் திறமை ஆகியவற்றை இந்தப் படம் தரமாக வெளிப்படுத்த இருக்கிறது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள், அசத்தலான நடிப்பு மற்றும் ஆன்மாவைத் தூண்டும் பின்னணி இசை ஆகியவற்றுடன் படம் பிரம்மாண்ட திரையரங்க அனுபவத்தைக் கொடுக்க உள்ளது.

 

புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த  இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையைதான் இந்த நாவல் விளக்குகிறது. 

 

இந்த நாவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘தி கோட் லைஃப்’ திரைப்படம் கேரளாவை தாண்டி இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த இந்தியப் படம் பற்றி இயக்குநர் பிளெஸ்ஸி கூறுகையில், “உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் நிச்சயம் எதேனும் ஒரு புள்ளியில் இந்தப் படத்தின் கதையைத் தங்களோடு இணைத்துப் பார்ப்பார்கள். அப்படியான கதையை உண்மைத் தன்மை மாறாமல் சினிமாவாக்க வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தில் நான் சந்தித்த மிகப்பெரிய சவால். இந்த நாவல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும், ஒருவருக்கு நம்ப முடியாத ஒன்று நடந்ததை ஒவ்வொரு கணத்திலும் காட்டி பார்வையாளர்களை ஈர்க்க விரும்புகிறேன். புனைவு கதைகளை விட உண்மை ஒருபோதும் விசித்திரமாக இருந்ததில்லை. கதை சொல்லும்  உண்மைத் தன்மையின் பிரம்மாண்டம் திரையரங்குகளில் பார்வையாளர்கள் படம் பார்க்கும் போது தெரிய வரும். இந்த மாபெரும் படைப்பை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ’தி கோட் லைஃப்’ திரைப்படம் திரையரங்குகளில் ஏப்ரல் 10, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது” என்றார்.

 

The Goat Life

 

கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான விஷுவல் ரொமான்ஸ், 7 ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திலேயே தொழில்துறையில் வலுவான ஒரு முத்திரையை பதித்துள்ளது. ’100 இயர்ஸ் ஆஃப் கிரிசோஸ்டம்’ தயாரிப்பின் மூலம் விஷுவல் ரொமான்ஸ் சினிமா உலகில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தப் படம் 48 மணிநேரம் கொண்ட ஒரு ஆவணப்படமாகும்.

 

பரவலாகப் பாராட்டைப் பெற்றதோடு, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்ற இப்படம், சினிமா மீது விஷுவல் ரொமான்ஸூக்கு உள்ள அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டியது. இயக்குநர் பிளெஸ்ஸி ஐப் தாமஸால் நிறுவப்பட்ட இந்நிறுவனம், ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் ஆறு கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட இந்திய சினிமாவில் பல விருதுகளை வென்ற அவருக்கு  மேலும் சிறப்புத் தருவதாக மாறியுள்ளது. பிளெஸ்ஸி ஐப் தாமஸின் திறமையான தலைமையின் கீழ், விஷுவல் ரொமான்ஸ் இந்திய சினிமாவில் பல சிறந்த கதைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9378

’இட்லி கடை’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு!
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

வந்த வழியையும், வாழ்ந்த வாழ்க்கையையும் என்றைக்கும் மறக்கக் கூடாது - நடிகர் தனுஷ்
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

Kollywood Stars in A Rhapsody 2025
Monday September-15 2025

The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...

Recent Gallery