ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘டங்கி’ திரைப்படம் இந்தியாவை கடந்து உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, ரசிகர்களின் அன்புக்குரியவர்களின் நினைவுகளைத் தூண்டும் உணர்வுப்பூர்வமான கதையம்சம் கொண்ட படமாகவும் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த பண்டிகைக் காலத்தில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்தை இந்தியத் திரையரங்குகளில் பார்ப்பதற்காக, உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து ரசிகர்கள் இந்தியாவிற்கு வர இருக்கிறார்கள்.
ஷாருக்கானின் ரசிகர் மன்றங்கள், ஷாரு எனும் நட்சத்திரத்தை உயிராக கொண்டாடுவதற்கும், அவரது படங்களை புதுமையான வழிகளில் விளம்பரப்படுத்துவதற்கும் பெயர் பெற்றவை, இதோ மீண்டும் டங்கி படத்திற்காக தங்கள் கொண்டாட்டத்தை இப்போதே ஆரம்பித்துவிட்டனர்.
படத்தின் கருப்பொருளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு தனித்துவமான முயற்சியை எடுத்துள்ளனர், இப்படத்தில் ஷாருக் கேரக்டர் தனது அன்புக்குரியவர்களுக்காக நாட்டின் எல்லைகளைக் கடக்கிறார். டங்கி படத்தின் பாத்திரங்கள் நாட்டின் எல்லைகளை சட்டத்திற்கு எதிராக கடப்பதாக கதை அமைந்திருந்தாலும், ரசிகர்கள் இப்படத்தைப் பார்க்க சட்டப்பூர்வமான பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அன்புக்குரியவர்களுக்காக ஒரு அசாதராண பயணத்தை மேற்கொள்ளும் உணர்வு மட்டுமே முக்கியம் என்பது, ரசிகர்களிடையே வலுவாக எதிரொலிக்கிறது, படத்தின் கதையுடன் ஒரு அழகான இணைப்பை இது உருவாக்கியுள்ளது.
டங்கி படத்தைக் காண வரும் ரசிகர்கள் வசிக்கும், பல நாடுகளிலும் அங்குள்ள திரையங்குகளில் டங்கி திரையிடப்படுகிறது ஆனாலும், ரசிகர்கள் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தங்கள் அன்புக்குரிய SRK படத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க விரும்புகிறார்கள். விடுமுறைக் காலம். நேபாளம், கனடா, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பல நாடுகளில் இருந்து ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்க, தங்கள் தாய்நாடான இந்தியாவிற்கு பயணம் செய்கிறார்கள், பயணிக்கும் ரசிகர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும், இது சுமார் 500+க்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டங்கி திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டங்கி டிராப் 1 (வீடியோ ) மற்றும் மனதைக் கவரும் டங்கி டிராப் 2: லுட் புட் கயா பாடல் ஏற்கனவே ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட 'டங்கி' திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...