சந்தானம் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் ‘சக்க போடு போடு ராஜா’ படமும் ஒன்று. விடிவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அதிகமான பொருட்ச்செலவில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது.
சிம்பு இசையமைக்கும் இப்படத்தின் பாடல் ஒன்றை அனிருத் பாடியுள்ளார். சமீபத்தில் வெளியான அப்பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், அப்பாடல் தான் படத்தில் சந்தானத்தின் அறிமுக பாடல் என்பதால், அதை மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்க திட்டமிட்ட இயக்குநர் ஜி.எல்.சேதுராமன்,
முன்னணி நடன இயக்குநர்களான ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோரை ஒன்றாக பணியாற்ற வைத்துள்ளார். ஒரு பாடலுக்கு ஐந்து நடன இயக்குநர்கள் பணியாற்றியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
“கலக்கு மச்சா டவுளத்துள
கால வாரும் காலத்திலே
கலங்க நா கோழையில்லே
களத்திளே இறங்கி காளபோல
ரைட்டு தாட்டு உள்ளத்திலே
வெச்சு இருக்கும் நல்ல புள்ள..” என்ற இந்த பாடலை, “டங்கா மாரி ஊதாரி...” புகழ் ரோகேஷ் எழுதியுள்ளார்.
ஜி.எல்.சேதுராமன் இயக்கும் இப்படத்திற்கு ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் விவேக் நடித்திருக்கிறார். இவர்களுடன் சம்பத் ராஜ், ரோபோ சங்கர், சஞ்சனா சிங், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில், யுவன் ஷங்கர் ராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் ஆகியோர் பாடல் பாடியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...