Latest News :

’பீனிக்ஸ்’ படம் மூலம் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகும் அனல் அரசு!
Friday December-01 2023

இந்திய சினிமாவின் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநரான அனல், அரசு 12 ஆண்டுகளுக்கு மேலாக சண்டைப்பயிற்சி கலைஞராக பணியாற்றிய பிறகே சண்டைப்பயிற்சி இயக்குநரானார். இத்தகைய அவருடைய அனுபவம் தான் தற்போது அவரை இந்திய சினிமாவின் முன்னணி சண்டைப்பயிற்சி இயக்குநராக்கியிருப்பதோடு, முன்னணி ஹீரோக்கள் விரும்பும் சண்டைப்பயிற்சி இயக்குநராகவும் உருவாக்கியுள்ளது.

 

இந்த நிலையில், அனல் அரசு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலக்ஷ்மி அரசகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு 'பீனிக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், விக்னேஷ், வர்ஷா விஸ்வநாத், அபி நக்‌ஷத்ரா, சத்யா.என்.ஜே, சம்பத், ஹரீஷ் உத்தமன், திலீபன், அட்டி ரிஷி, பூவையார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்ய, சத்யா.என்.ஜே ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் தொடங்கியது.

 

இயக்குநராக அறிமுகமாவது குறித்து அனல் அரசு கூறுகையில், “இயக்குநராக என் முதல் படம் இது, இதை சிறந்த படைப்பாக கொடுக்க ஆவலுடன் இருக்கிறேன். நாங்கள் ஜவான் படப்பிடிப்பில் இருந்தபோது, விஜய் சேதுபதியின் மகன் தனது தந்தைக்கு மதிய உணவு பரிமாறுவதற்காக செட்டுக்கு வந்திருந்தார். அவர் அதிரடியான சண்டைக் காட்சிக்கான தயாரிப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் என் கதையில் நடிக்க அவர் பொருத்தமாக இருப்பார் என்பதை உணர்ந்தேன். இந்த எண்ணத்தை விஜய் சேதுபதியிடம் பகிர்ந்து கொண்டபோது, சூர்யா இந்த கதைக்கு பொருத்தமானவர் என்பதால் இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்,  இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அவரை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்.” என்றார்.

 

Phoenix Movie Pooja

 

படத்தின் நாயகன் சூர்யா கூறுகையில், “நீண்ட நாட்களாக சண்டைக் காட்சிகளில் நடிக்க விரும்பினேன். அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது, அதை சரியாகப் பயன்படுத்த விரும்பினேன். இந்த படத்திற்காக 6 மாதம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இந்த படத்தில் நடித்து தந்தையின் ஆதரவு இல்லாமல் தானே தனக்கான பெயரை உருவாக்குவேன், என் தந்தையின் நடை வேறு, எனது நடை வேறு.” என்றார்.

Related News

9381

பிரபலங்களின் சுவாரஸ்ய தகவல்களோடு உருவாகியுள்ள ஆர்.எம்.வீரப்பன் பற்றிய ஆவணப்படம்!
Wednesday December-24 2025

தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...

சூடுபிடித்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! - தமிழ்குமரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவு
Wednesday December-24 2025

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...

’பல்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday December-23 2025

குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...

Recent Gallery