இயக்குநர் மிஷ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘ட்ரெயின்’ (Train) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே ட்ரெயின் (Train) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார், மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்.டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
‘டெவில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக உருவெடுத்த இயக்குநர் மிஷ்கின், இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பெளசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பு செய்கிறார். வி.மாயபாண்டி கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

’ட்ரெயின்’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. இதில், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி, செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், எஸ்.கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன், நாக் ஸ்டுடியோஸ் கல்யாணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...
நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே...
பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது...