அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ பல தடைகளை கடந்து தீபாவளியன்று நிச்சயம் வெளிவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், அதே படக்குழுவினரின் புது முடிவால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
’மெர்சல்’ படத்தின் டீசர் வெளியான ஒரு சில தினங்களிலேயே அதிகமான லைக்குகளை பெற்று உலக அளவில் சாதனை புரிந்ததோடு, அதிகமான பார்வையாளர்கள் பார்த்த திரைப்பட டீசர் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. இத்துடன் தொடர்ந்து பல சாதனைகளை ‘மெர்சல்’ படம் நிகழ்த்தி வருவதால், படத்தின் டிரைலரை வெளியிட வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்பட மெர்சல் டிரைலரை வெளியிட முடிவு செய்திருந்த தயாரிப்பு தரப்பு, படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே இருப்பதால், தற்போது டிரைலரை வெளியிடப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதே சமயம், ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்கும் விதத்தில், பல புரோமோ டீசர்களை வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு, பலவிதமான போஸ்டர் டிசைன்களையும் வெளியிட முடிவு செய்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...