Latest News :

விஷால் படத்தை கைப்பற்றிய முன்னணி ஓடிடி நிறுவனம்!
Tuesday December-12 2023

’தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ படங்களை தொடர்ந்து நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி மூன்றாவது முறையாக ‘ரத்னம்’ படத்திற்காக கைகோர்த்துள்ளார்கள். இவர்களது கூட்டணியின் இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்கள் என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் விதமாக படத்தின் ஓடிடி உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

 

முன்னணி ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம், ‘ரத்னம்’ படத்தின் ஓடிடி உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாம். இதுவரை நடிகர் விஷாலின் திரை பயணத்தில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் இந்த வியாபாரம் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்தியதோடு, படத்தின் மீதான் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

 

ஸ்டோன்  பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிருவனங்கள் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் அலங்கார் பாண்டியன் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்கிறார்.

 

Vishal Poster

 

விஷாலின் 34 வது திரைப்படமாக உருவாகும் ‘ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது திருப்பதி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

Related News

9395

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

‘மாண்புமிகு பறை’ திரைப்படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!
Monday November-10 2025

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...

’ரெட்ட தல’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Monday November-10 2025

பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...

Recent Gallery