அஞ்சலி நாயருடன் ஜோடி சேர்ந்த ஆர்ஜே விஜய்!
Wednesday December-13 2023

‘ஜிஸ்பி’, ‘டாடா’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ஓலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் தயாரிப்பில் பிரபல ஆர்ஜே-வும், சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்தவருமான விஜய் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ‘டாணாக்காரன்’ புகழ் அஞ்சலி நாயர் நடிக்கிறார். 

 

அறிமுக இயக்குநர் ஹேமநாதன் இயக்கும் இப்படத்தின் கதை கணவன்-மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மோதல்களை கருவாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. பல கனவுகள் கொண்ட ஒருவன் குடும்பத்திற்காக தனது கனவுகளை தியாகம் செய்து, நல்ல கணவனாக வாழ்வில் எப்படி வெற்றியடைகிறான் என்ற ரீதியில் இப்படத்தின் கதை பயணிக்கிறது.

 

ஆர்ஜே விஜய், அஞ்சலி நாயர் முதன்மை வேடத்தில் நடிக்க, மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ், லல்லு, கதிர் மற்றும் பல முன்னணி நடசத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.  கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். சிவசங்கர் இப்படத்தின் கலை இயக்குநர்.

 

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் 8 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 12 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது.

 

RJ Vijay and Anjali Nair

Related News

9397

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery