சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘யாவரும் வல்லவரே’
Monday December-18 2023

இயக்குநர் என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில், சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘யாவரும் வல்லவரே’. 11:11 புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர்.பிரபு திலக் தயாரித்திருக்கும் இப்படத்தில் ‘நான் கடவுள்’  ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். ராமா ராவ் படத்தொகுப்பு செய்ய, சிவா யோகா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். வெற்றி வீரா சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பொன் முதுவேல், தீப செல்வன், ஆதிரை ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். 

 

வரும் டிசம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இபப்டம் குறித்து தயாரிப்பாளர் டாக்டர்.பிரபு திலக் கூறுகையில், “’வால்டர்’, ’பாரிஸ் ஜெயராஜ்’ படங்களின் பிரமாண்டமான வெற்றியை அடுத்து எங்களின் ’யாவரும் வல்லவரே’ படம் டிசம்பர் 29, 2023 அன்று வெளியாகும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ஹைப்பர்லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது. இயக்குநர்  என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி  திரைக்கதையை கூறியபோது அவரது ஐடியாவும், படம் குறித்த பார்வையும் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு போன்ற திறமை மிக்க நடிகர்களும் இந்தப் படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.” என்றார்.

Related News

9412

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery