‘சார்லி சாப்ளின்’ வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் மற்றும் நடிகர் பிரபு தேவா ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, கொடைக்கானல் மற்றும் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள இடங்களில் நடைபெற்றுள்ளது.
இந்தியத் திரையுலகில் இதுவரை கண்டிராத கதைக்களத்தை கொண்டுள்ள இப்படத்தின் தலைப்பு ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். மிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக ரசிகர்களால் ஒரு படத்தின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறுகையில், “மக்களாக தேர்ந்தெடுத்த படத்தின் டைட்டில் மக்களிடம் எப்படி ரீச் ஆனதோ அதுபோலவே படமும் ரீச் ஆகும். ஏன் என்றால் படம் கதையாகவும் விஷுவலாகவும் அவ்வளவு ரிச் ஆக வந்துள்ளது. பட்ஜெட் ஆகவும் இது பெரியபடம். தயாரிப்பாளர் ராஜேந்திர ராஜன், பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கான பிரமாண்டமான செட்களை குறை வைக்காமல் செய்து தந்தார். படத்தின் திரைக்கதையைப் போலவே, பாடல்களும் இசையும் இந்தப் படத்தில் முக்கியமான ஒரு அம்சம். இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார். கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும், ஜனார்த்தனனின் கலை இயக்கமும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. பிரபுதேவா, மடோனா, யோகிபாபு, அபிராமி, யாசிகா ஆனந்த், புஜிதா பொன்னடா கிங்ஸ்ட்லி, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், ஜான் விஜய், சாய்தீனா, மதுசூதனராவ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ள மற்ற எல்லா நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர். மக்களை கொண்டாட வைக்கும் அளவில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு குறித்தான அறிவிப்பு விரைவில் வரும்” என்றார்.
பிரபு தேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கிறார். இவரகளுடன் யோகிபாபு, அபிராமி, யாஷிகா ஆனந்த், புஜிதா பொன்னடா, ரெடின் கிங்ஸ்ட்லி, ஒய்.ஜி. மகேந்திரன், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ரோபோ சங்கர், சுரேஷ் சக்ரவர்த்தி, சாய் தீனா, எம்.எஸ். பாஸ்கர், ‘டாக்டர்’ சிவா, ‘கல்லூரி’ வினோத், கோதண்டம், ‘ஆதித்யா கதிர்’, ஆதவன், ‘தெலுங்கு’ ரகுபாபு, மரியா, அபி பார்கவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...