படத்துக்கு முன்பாக ஷாருக்கான் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளித்த ‘டங்கி’ படக்குழு!
Tuesday December-19 2023

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘டங்கி’ திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு பெரும் சாதனைப் படைத்து வருகிறது.

 

இந்த நிலையில், படம் வெளியாவதற்கு முன்பாக ஷாருக்கானின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ‘டங்கி’ படக்குழு ‘டங்கி டைரிஸ்’ என்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. ஷாருக் துபாயில் உள்ள 'தி வோக்ஸ் சினிமா' மற்றும் குளோபல் வில்லேஜை பார்வையிட்டதோடு, அங்கு அவர் படத்தை விளம்பரப்படுத்தும் ஒரு பெரிய நிகழ்வில் கலந்துக்கொண்டார். இதில், லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் டங்கி திரைப்படத்தின் அனுபவங்களை அந்த உலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில்  ராஜ்குமார் ஹிரானி, ஷாருக்கான், மற்றும் டாப்ஸி பண்ணு பங்குபெறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி தான் இந்த ‘டங்கி டைரிஸ்’.

 

தற்போது படக்குழு இந்த ‘டங்கி டைரிஸ்’ வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. மேலும், படத்தில் வரும் ஷாருக்கானின் ஹார்டி கேரக்டரை ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும், அறிமுகப்படுத்தும் 'பந்தா' பாடலானது, பெப்பி டிராக் வகையில் அமைந்துள்ளது. இந்த பாடலை தில்ஜித் தோசன்ஜ் பாடியுள்ளார், பாடலின் வரிகளை குமார் எழுதியுள்ளார் மற்றும் ப்ரீதம் இசையமைத்துள்ளார். ஷாருக்கானின் அறிமுகப் பாடல் நிச்சயம் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

 

 

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

Related News

9416

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery