Latest News :

வித்தியாசமான ரூட்டில் உருவாகியிருக்கும் ‘தரைப்படை’!
Tuesday December-19 2023

ஒரு படத்தின் கதை தொடங்கியவுடன் அந்த படத்தின் கதாநாயகன் யார்?, வில்லன் யார்? என்று தெரிந்துவிடும். எப்படிப்பட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும், இவற்றில் எந்த ஒரு மாறுபாடும் இருக்காது. ஆனால், இத்தகைய விசயத்தையே வித்தியாசமாக கையாண்டு புதிய ரூட்டில் உருவாகியிருக்கும் படம் ‘தரைப்படை’. இந்த படத்தின் சிறப்பம்சமே, ரசிகர்கள் யார் நாயகன்?, யார் வில்லன்? என்று கண்டுபிடிக்காதபடி இப்படத்தின் கதையும், காட்சிகளும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 

இப்படத்தில்  ஜீவா , பிரஜின், விஜய் விஷ்வா என்று மூன்று கதாநாயகர்கள் நடித்திருக்கிறார்கள்.  அந்த மூன்று நாயகர்களும் அவரவரும் தங்களுக்கான அடையாளங்களைத் தேடிக்கொண்டிருப்பவர்கள். ஜீவா நடித்த ’கொம்பு’ படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்பட்டது. இந்த ஜீவா, ரஜினி ரசிகர்களிடம் நன்கு பிரபலமானவர், ரஜினி போல் மேனரிசம் காட்டுவதில் தனக்கென தனி இடம் பிடித்தவர். அதேபோல நல்ல கதையைத்  தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக பிரஜின் இருக்கிறார். அவர் நடித்த D3 திரைப்படம் தமிழ்நாட்டை விடவும் கேரளாவில் அதிக வசூல் பெற்றுத் தந்துள்ளது. விஜய் விஷ்வா சமூக சேவைகள் மூலமும் சில குறிப்பிடத்தக்க படங்களின் பாத்திரங்கள் மூலமும் மக்களிடம் நன்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர். இப்படி தனித்தனியான அடையாளம் பெற்ற மூன்று பேரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஜோடியாக மூன்று அறிமுக நிலை கதாநாயகிகளும் நடிக்கிறார்கள்.

 

படத்திற்காகக் கோடிக் கணக்கில் செலவழித்து  கலை இயக்குநர் ரவீந்திரன் கைவண்ணத்தில் ஒரு பிரமாண்டமான ஏர்போர்ட் செட் போடப்பட்டுள்ளது. அதில் படத்தில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மிரட்டல் செல்வாவின் இயக்கத்தில் 6 சண்டைக் காட்சிகள் படமாகியிருக்கின்றன.

 

இயக்குநர் ராம் பிரபாவுடன் சுரேஷ்குமார் சுந்தரம், மனோஜ் குமார் பாபு, ராம்நாத், ரவீந்திரன்,  மிரட்டல் செல்வா, எஸ்.வி.ஜாய்மதி, ராக் சங்கர்,சரண் பாஸ்கர், ராஜன் ரீ,குருதர்ஷன், மேகமூட்டம் வைத்தி, நித்திஷ் ஸ்ரீராம் , பவிஷி பாலன்,ஸ்ரீ சாய் ஸ்டுடியோ, வெங்கட் எனப் பல்வேறு  திறமைசாலிகளுடன் கூட்டணி சேர்த்துக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

படத்தின் கதை மொழியை தாண்டி உலகத்தரத்திலானதாக இருப்பதால் தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி உள்ளிட பல மொழிகளில் மொழிமாற்றம் செய்து பான் இந்தியா திரைப்படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related News

9418

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...