500 திரைப்படங்களுக்கு மேல் மக்கள் தொடர்பாளராகவும், 6 நேரடி தமிழ்த் திரைப்படங்களை தயாரித்துவருமான தற்போதைய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான என்.விஜயமுரளி, மகா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் ‘தினசரி’. அறிமுக இயக்குநர் சங்கர் பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கிறார்.
இதில் நாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, நாயகியாக அமெரிக்காவைச் சேர்ந்த சிந்தியா லெளர் டே நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ பணியாற்றுகிறார். சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, தினேஷ் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார். பாலமுருகன் மற்றும் சண்முகம் தயாரிப்பு மேற்பார்வையாளர்களாக பணியாற்றுகிறார்கள்.
படம் பற்றி இயக்குநர் சங்கர் பாரதி கூறுகையில், “மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எப்படி கையாள்வது.? குறிப்பாக இளைஞர்கள் பணம் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை நகைச்சுவையுடன் ஆக்சனையும் கலந்து விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன். நாயகனாக நடிக்கும் ஸ்ரீகாந்த் ஜோடியாக அமெரிக்காவில் வாழும் சிந்தியா லெளர் டேவை கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளேன். பிரேம்ஜி, எம்.எஸ். பாஸ்கர் , மீரா கிருஷ்ணன், வினோதினி, முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்கள்.
இளையராஜா இசையில் முதல் பட இயக்குனர்களின் படங்கள் வெற்றி படங்களாகவே இருந்து வரும் சென்டிமெண்டில் இப்பொழுது நானும் இணைகிறேன். எனக்கு இது தான் முதல் படம்- இளையராஜா என்ற மாபெரும் சாதனையாளர் என் படத்திற்கு இசையமைப்பது நான் செய்த பாக்கியம்.” என்றார்.
இப்படத்தில் இடம்பெறும் பாடல்களில் இரண்டு பாடல்களை மிக பிரமாண்டமான முறையில் படமாக்க முடிவு செய்த படக்குழு, அதற்காக மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரமாண்ட அரங்கம் அமைத்து அதில் படப்பிடிப்பு நடத்தியுள்ளது. இந்த பாடல் காட்சிகள நிச்சயம் ரசிகர்களிடம் தனி கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள ‘தினசரி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...