Latest News :

பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் ’மூன்றாம் மனிதன்’! - பத்திரிகையாளர்கள் பாராட்டு
Wednesday December-27 2023

இயக்குநர் ராம்தேவ் கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘மூன்றாம் மனிதன்’. கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், பிரனா, ஸ்ரீநாத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் பத்திரிகையாளர்கள் காட்சி நிகழ்ச்சி நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு படம் பார்த்த பத்திரிகையாளர்கள் சிறு முதலீட்டில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய கருத்துள்ள படம் என்றும், மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தேவையான ஒரு கருத்தை, கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் இயக்குநர் ராம்தேவ் சிறப்பாக சொல்லியிருக்கிறார், என்று பாராட்டியதோடு, இந்த படத்தை பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டும், என்று தெரிவித்தனர்.

 

படம் குறித்து பேசிய கே.பாக்யராஜ், “இயக்குனர் ராம்தேவ் தயாரிப்பாளர்களை எப்படி பிடிக்கிறார் என்று தெரியவில்லை. அதற்கு ஒரு திறமை வேணும். என்னுடைய உதவியாளர்கள் சிலர் நன்றாக வந்து விடுவார்கள்  என்று எண்ணுவேன். ஆனால் வாய்ப்பு கிடைக்காது. அந்த வகையில் ராம்தேவ். நான்கைந்து தயாரிப்பாளர் களை பிடித்துவிடுகிறார். ஒரு டெக்னீஷியன் என்ற  முறையில் இந்த படத்தில் நீங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று என்னிடம்  கேட்டார். சரி என்ற ஒப்புக்கொண்டேன். அதற்கு பிறகுதான் தெரிந்தது அவரும் வேஷம் போட்டுக் கொண்டு வந்து நடிக்க நின்றார்.  முக்கியமான வேடத்தை  எடுத்துக் கொண்டு நடித்தார். இப்படத்தின் கதை வித்தியாசமாக இருந்தது. படத்தின் ஓப்பணிங்கில் நானும் பிரணாவும் வருவோம் கிளைமாக்ஸ்சிலும் அப்படியே முடியும். கிரைம் சப்ஜெக்ட் என்றாலும் கிளைமாக்சில். சென்டிமென்ட்டாக முடியும் வகையில் கதை அமைத்திருக்கிறார்.  படத்தில் ஏதாவது மெசேஜ் இருக்கா என்று கேட்டால், மெசேஜ் இருக்கிறது. இதில் நடித்திருக்கும் பிரணா அவரது வயதுக்கு மீறிய பாத்திரம் ஏற்று செய்திருக்கிறார். அப்படி செய்வது ஒரு அனுபவம். பாலசந்தர் சாரின் மூன்று முடிச்சு படத்தில் ஶ்ரீ தேவி நடித்தபோது அவரது வயதுக்கு மீறிய ஒரு பாத்திரத்தில் நடித்தார். இந்த அனுபவம் அவர்களுக்கு பின்னால் உதவியாக இருக்கும்.

 

சோனியா அகர்வாலுடன் இரண்டு நாள்  இந்த படத்தில் நடித்தேன். அவர் வசனம் பேசும் போது சத்தமே  கேட்காது. ஆனால் லிப் மூவ்மென்ட்ஸ் சரியாக இருக்கும். ஶ்ரீநாத்தும்  முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்  அவர் டைரக்ஷன் செய்து கொண்டிருந்தார் இப்போது நடிக்க வந்து விட்டார்  டைரக்ஷன்  செய்வது கஷ்டம் அதான் நிறைய டைரக்டர்கள். நடிக்க வந்து விட்டார்கள். 

 

இந்த படத்தை பொறுத்தவரை நிறைய  டெக்னீஷியன்கள்  ஒத்துழைத்திருக்கிறார்கள் நிறைய பேர் படம் எடுப்பதற்கு  ரொம்ப சிரமப்படுவார்கள்.  படம் எடுத்துவிட்டு அதை ரிலீசுக்கு கொண்டு வருவது அதைவிட பெரிய  கஷ்டம் அந்த மாதிரி ஏகப்பட்ட படங்கள் தேங்கிக் கிடக்கிறது. ஆனால் இந்த படத்தை 29ம் தேதி வெளியீடு என்று இயக்குனர் ராம் தேவ் அறிவிப்பு கொடுத்து விட்டார்.அதற்கு அவரது விடா முயற்சிதான் காரணம். எங்க இயக்குனர் பாரதிராஜா சார் என்ன எடுக்க வேண்டுமோ அதை சரியாக எடுப்பார். அதற்காக கடுமையாக உழைப்பார். அதேபோல் ராம் தேவும்  என்ன எடுக்க வேண்டுமோ அதை எடுப்பார். கடுமையாக,  சின்சியராக உழைப்பார். ஒரு சிலர் ஒரு நாள் இரண்டு நாள் கூடுதலாக எடுப்பார்கள். ராம் தேவ் பொறுத்த வரை ஒரு நாள் இரண்டு நாள் முன்னதாகவே முடித்த விடுவார். தமிழ் ரசிகர்கள் புதியவர்கள் நடித்தாலும் அதை பார்ப்பார்கள். அதன்பிறகு வாய்மொழி சொல் கேட்டு பார்த்து படத்தை வெற்றி பெற செய்வார்கள். ராம்தேவுக்கும் அவரது குழுவும் எனது வாழ்த்துக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

 

நடிகை சோனியா அகர்வால் பேசுகையில், “மூன்றாம் மனிதன் படத்தில் நடித்தது நல்ல அனுபவம். இதில் லெஜன்ட் பாக்யராஜ் சாருடன்   நடித்தது மகிழ்ச்சி. அவருடன் நடித்தபோது நிறைய கற்றுக் கொண்டேன் .  இப்படம் அனைவருக்கும்.பிடிக்கும். இயக்குனர் ராம் தேவ் மற்றும் படக் குழுக்கு வாழ்த்துக்கள். எல்லோரும் படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள். நன்றி.” என்றார்.

 

இயக்குநர் ராம்தேவ் பேசுகையில், “இந்த படத்தில் லீட் கேரக்டரே பாக்யராஜ் சார்தான். சிறப்பாக நடித்திருக்கிறார். சோனியா, பிரணா, ஶ்ரீநாத்  வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களும் தியேட்டர்காரர்களும் தான் கடவுள்கள். இப்படத்துக்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

Moondram Manithan

 

நடிகை பிரணா பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு மிகப் பெரிய வாய்ப்பை இயக்குனர் ராம் தேவ் கொடுத்திருக்கிறார் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த படம் பட்ஜெட் படம் என்பதைவிட நிறைய பேருடைய உழைப்பு இதில் இருக்கிறது. நிறைய புது முகங்கள் நடித்திருக்கிறார்கள் நானே ஒரு புதுமுகம்தான்.  நிறைய கெட்டப்,  நிறைய நடிப்பு முக்கியமாக  இந்த சமுதாயத்துக்கு தேவைப்படுகிற ஒரு கதை இந்த படத்தில் இருக் கிறது. நடைமுறையில் இருக்கிற ஒரு சம்பவத்தை கதையாக உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு நீண்ட நாள் படைப்பு கஷ்டபட்டு உருவாக்கி  இருக்கிறோம். இதை மக்களிடம் கொண்டு சென்று மீடியாக்கள் சேர்க்க வேண்டும் என்று  கேட்டுக் கொள்கிறேன். சின்ன படங்கள் தியேட்டர்ல பார்க்காமல் அப்படியே போய் விடுகிறது. சின்ன படமோ, பெரிய படமோ அதை மக்கள் தியேட்டரில்  சென்று பார்க்க வேண்டும்.  இந்த படத்தில் பாக்யராஜ் சாருடன் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். என் அப்பாவுக்கும் பிடித்த நடிகர் அவர் எனக்கும் பிடிக்கும்.அவருடன் ஒர்க் பண்ணது ரொம்ப சந்தோஷம். 90ஸ் ஹீரோயின் சோனியா அகர்வால் உடன் நடித்தது ரொம்ப சந்தோஷம் அவரை எல்லோ ருக்கும் பிடிக்கும். ஒரு குடும்பமா இந்த படம் செய்திருக்கிறோம் பார்த்து வெற்றி பெறச் செய்து ஆதரவு தாருங்கள். நன்றி.” என்றார்.

 

நடிகர் ஶ்ரீ நாத் பேசுகையில், “இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு  முக்கிய காரணம் பாக்யராஜ் சார்தான். ஏனென்றால் நான் பள்ளி பருவத்திலிருந்தே அவருடைய ரசிகன். இயக்குனர் ராம்  தேவ் சொல்லும் போது பாக்யராஜ் சாருடன் காம்பினேஷன் அவர் உங்களை விசாரிப்பதுபோல் கிரைம் சப்ஜெக்ட் என்றார். பாக்யராஜ் சாருடன் நடித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. உத்தம புத்திரன் படத்தில் அவருடன் நடித்தேன். அதற்கு  பிறகு அவருடன் நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. அவருடன்  நடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தில் நடித்தேன்.  இந்த வாய்ப்பு கொடுத்தற்கு இயக்குநர் ராம் தேவுக்கு நன்றி. பாக்யராஜ் சார் ஒரு டைரக்டர் மட்டும்  கிடையாது பன்முகம் கொண்டவர். அவரது ரசிகராக நான் இருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன். நான் அசிஸ்டன்ட் டைரக்டர் ஆனபோது  பாக்யராஜ் சார் பற்றி  கேள்விப். பட்டுள்ளேன் ஸ்கிரிப்டுக்கு ரொம்ப நேர்மையாக இருக்க வேண்டும் என்று  உழைப்பார் என்பார்கள்.  நான் டைரக்டரானால் அவரைப் போல் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அவர் மீது எனக்கு அன்பு, பாசம்  இருக்கிறது. அதனால்தான் அவரது மகன் சாந்தனுவுடன் நான் நட்புடன் இருக்கிறேன்.

 

சோனியாவுடன் முதல்முறையாக இதில் நடிக்கிறேன் காதல் கொண்டேன் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இருக்கிறார் சோனியா,  நன்கு நடிப்பார்.  அவருடைய கண் எனக்கு ரொம்ப பிடிக்கும். இயக்குனர் ராம் தேவ் விடம் அவரது தன்னம்பிக்கை ரொம்ப பிடிக்கும் எல்லா வேலையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வார். இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.  அவர்  வசனம் எழுதுவது. சோசியல் மீடியாவில் போய் ரீச் ஆக வேண்டும் என்ற அளவில் பிரமாதமான வசனங்கள்  எழுதி உள்ளார்.  ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து பார்க்கும் அளவுக்கு நல்ல ஒரு கதையை தேர்வு  செய்துள்ளார். அதேபோல். நடிகை பிரணா அவரது வயதுக்கு மீறியஒரு பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

Related News

9423

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery