இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டங்கி’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதோடு, குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, அப்படத்தை ரசிகர்கள் கொண்டாடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், ‘டங்கி’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஷாருக்கானின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், படத்தின் கட்-அவுட், போஸ்டர்களோடு அவரது வீட்டு முன்பு திரண்டனர். இதனைப் பார்த்த ஷாருக்கான், வெளியே வந்து அவர்கள் முன்பு கையசைத்து அவர்களை மேலும் உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து உலகம் முழுவதும் அதிகரித்து வரும் டங்கியின் வரவேற்புக்கு இடையே சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை பார்த்து கையசைத்து.. பறக்கும் முத்தத்தை வழங்கி.. தனது மாயாஜால வசீகரத்தை வெளிப்படுத்தினார். 'டங்கி' திரைப்படத்தின் வெற்றியை... ரசிகர்களும், சூப்பர் ஸ்டாரும் கொண்டாடுவதற்காக ஒன்று கூடினர். ஒவ்வொரு ஆண்டும் ஷாருக் கானின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அவருடைய வீட்டிற்கு முன் திரண்டு வாழ்த்து தெரிவிப்பர். தற்போது 'டங்கி' படத்தின் வெற்றி ரசிகர்களுக்கு மற்றொரு கொண்டாட்டமாக அமைந்தது.
ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் டங்கியில் இணைந்திருக்கிறார்கள்.
இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதியிருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...