கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் ஷாருக்கானுக்கு மிக சிறப்பான ஆண்டாக அமைந்ததோடு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அவருக்கு சிறப்பானதாக அமையும் என்பதை நிரூபிக்கும் வகையில், அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டங்கி’ திரைப்படத்தின் வசூல் சாதனை தற்போதும் தொடர்ந்துக் கொண்டிருப்பது இந்திய திரையுலகை வியக்க வைத்துள்ளது.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘டங்கி’ திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபீஸ் மட்டும் இன்றி உலக பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் வரவேற்பை பெற்று தற்போதும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் தேதியன்று ரூ.11.25 கோடி வசூல் செய்து புதிய சாதனைப் படைத்துள்ளது ‘டங்கி’ திரைப்படம். இதன் மூலம், இந்தியாவில் படத்தின் உள்நாட்டு மொத்த வசூல் 188.07 கோடியை எட்டியுள்ளது. வார இறுதி நாளில் 38 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளித்துள்ளனர். இந்த விடுமுறை காலத்தை கொண்டாட, குடும்ப பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான படைப்பாக டங்கி அமைந்திருக்கிறது. உலகளவிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் சூப்பர் ஸ்டேடியாக 380.60 கோடியை எட்டியுள்ளது. இப்படம் இந்தியாவில் 200 கோடியையும் உலகளவில் 400 கோடியையும் விரைவில் கடக்கவுள்ளது.
ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட், ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கெளரி கான் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன், டாப்ஸி, பூமன் இரானி, விக்கி கெளஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...