எனக்கு அவங்க தான் முன்னுதாரணம்! - மனம் திறந்த நடிகை பவ்யா த்ரிக்கா
Monday January-08 2024

கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ‘ஜோ’ என்ற திரைப்படமும் ஒன்று. இப்படத்தின் மூலம் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் பவ்யா த்ரிக்கா. இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பவ்யா த்ரிக்கா, தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

 

சென்னையில் வாழும் பஞ்சாபி பெண்ணான இவர், தமிழை அச்சு அசத்தலாக பேசுவது ஆச்சரியத்திற்குரியது.  நடிப்பின் மேல் ஆர்வம் இருந்தாலும் படிப்பிலும் கவனம் சிதறாமல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படித்து பட்டம் பெற்றவர், தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.

 

இது குறித்து நடிகை பவ்யா த்ரிக்கா கூறுகையில், “சிறு வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக இருந்தது.  என் அப்பாவின் உறுதுணை  எனக்கு கை கொடுத்தது.  பல தமிழ் திரைப்படங்களை பார்த்து தமிழும், சினிமாவின்  சாராம்சத்தை பார்த்தே வளர்ந்தேன்.   

 

நடிப்பிற்கான தேடலில் இருக்கும் போது  'கதிர்' என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது. அதைத்தொடர்ந்து,  கல்லூரியிலும் என்னுடைய தோழிகள் என்னை ஊக்குவித்ததால் ஜோ என்ற திரைப்படத்தில் நான் நடித்தேன்.  ஜோ திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும்  மகிழ்வான நினைவுகளாக இருக்கிறது.  வெற்றி அப்படிங்கறது ஒரு சராசரியாக இருக்கக்கூடிய  நடிகைகளுக்கு எந்த அளவுக்கு மாறும் என்று நினைக்கும் போது ரொம்பவே ஆச்சரியமா இருக்கு. இன்று நான் எங்கு சென்றாலும், மக்கள் என்னை அங்கீகரித்து வந்து பேசுகிறார்கள் அதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.   அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளேன். அதே நேரத்தில், ஜோ திரைப்படம் எனக்கு கொடுத்த  அங்கீகாரமும் புகழும் மனதில் வைத்து நல்ல கதாபாத்திரங்களை  தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இந்த ஆண்டில் சிறந்த நடிகையாக வலம் வருவேன் என்று நம்புகிறேன்.  

 

எனக்கு சமந்தாவை ரொம்ப பிடிக்கும் காரணம் என்னவென்றால் எந்தவித பின்புலமும் இல்லாமல்  தமிழ்,  தெலுங்கு என்று  பல மொழிகளில் நடிச்சு மக்கள் மனசுல இடம் பெற்று இருக்காங்க, அவங்க எனக்கு ஒரு முன்னுதாரணமா இருக்காங்க.” என்றார்.

 

தற்போது பல படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி வரும் பவ்யா த்ரிக்கா, தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து அடிக்கடி அப்டேட் வெளியாகி கொண்டிருக்கும் என்று மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

Related News

9437

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery