தொடர் வெற்றிகள், படம் பூஜை போட்டதும் வியாபாரம் என்று அடுத்தடுத்த உயரத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, இனி பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார். அதன் முதல் முயற்சியாக தான் ‘ஜுங்கா’ படத்தை சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தானே தயாரித்து நடித்து வருகிறார்.
தற்போது ஜுங்கா படத்தின் படப்பிடிப்பிற்காக பிரான்ஸ் நாட்டில் முகாமிட்டிருக்கும் விஜய் சேதுபதி, தனது சகோதரி மூலம் ‘இறைவி’ என்ற ஆடை விற்பனை மையத்தை தொடங்கியவர், விரைவில் சேமியா விற்பனையிலும் இறங்கப்போகிறாராம்.
ஆனால், இந்த சேமியா நிறுவனம் அவருடையதல்ல, தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல சேமியா நிறுவனத்தின் விளம்பர தூதராக விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, வேஷ்ட்டி விளம்பரத்தில் நடித்த விஜய் சேதுபதி, அதை தொடர்ந்து சேமியா விளம்பரத்தில் நடிப்பதோடு, மேலும் பல விளம்பர படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...