இயக்குநர் கோகுலுடன் கைகோர்த்த விஷ்ணு விஷால்!
Monday January-08 2024

‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால் சொந்தமாக தயாரித்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இந்த படத்தை, ‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்’, ’கட்டா குஸ்தி’ , ’எஃப் ஐ ஆர்’ என தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து வரும் விஷ்னு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்ட ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஆர்யன்’ விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது அந்நிறுவனம் அறிவித்துள்ள இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் - புரொடக்‌ஷன் நம்பர் எண் 10’ என்று அழைக்கபப்டும் இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பிரமாண்டமான ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக உள்ளது.

 

இப்படத்தின் முதல்கட்ட தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், நடிகர்  விஷ்ணு விஷால் நடித்து வரும் படங்களின் பணிகள் முடிவடைந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

9442

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery