கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது யோகி பாபு, கிங்ஸ்லி கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார். இவர்களது கூட்டணியில் காமெடி திரில்லர் படமாக உருவாகி வந்த புதிய படத்திற்கு ‘சிஸ்டர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
துவரகா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிளேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக ரா.சவரி முத்து இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக படக்குழு உருவாக்கியுள்ள மோஷன் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர்கள் அருண்ராஜா காமராஜ், சாம் ஆண்டன், ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
மிகப்பெரிய பொருட்செலவில், அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி வரும் ‘சிஸ்டர்’ திரைப்படம், ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை கலகலப்பான காமெடியாகவும், பரபரப்பான திரில்லராகவும் சொல்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு மற்றும் கிங்ஸ்லி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.
தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சரத்குமார் படத்தொகுப்பு செய்ய, சுரேஷ் கல்லேரி படத்தொகுப்பு செய்கிறார். சுகன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ஷெரிப் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
இன்று வெளியாகியுள்ள படத்தின் தலைப்புக்கான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் வெளியீட்டு பற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...