Latest News :

”யாருகிட்ட தோத்தம்னு பார்க்க கூடாது, ஏன் தோத்தம்னு பார்க்கணும்” - கவனம் ஈர்க்கும் ‘புளூ ஸ்டார்’ டிரைலர்!
Thursday January-11 2024

விளையாட்டுகளை மையமாக கொண்டு தமிழ் சினிமாவில் வெளியாகியிருக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதிலும், கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய படம் என்றால் சொல்லவா வேண்டும், இளைஞர்களின் வாழ்வில் தனி இடம் பிடித்த விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்பது மட்டும் இன்றி, வாய்ப்பு கிடைக்கும் போது விளையாடும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘புளூ ஸ்டார்’.

 

அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்கியுள்ளார். லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் ஆர்.கணேஷ் மூர்த்தி, ஜி.சவுந்தர்யா மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

 

வரும் ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ’புளூ ஸ்டார்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கிரிக்கெட் விளையாட்டுடன், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வசனங்கள் நிறைந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

 

குறிப்பாக, விளையாட்டு மூலம் இளைஞர்கள் ஒழுக்கமாக இருப்பார்கள் என்பதோடு, விளையாட்டால் ஒருவனுடைய வாழ்க்கை உயர்வடையும், போன்ற கருத்துகள் வலியுறுத்தப்பட்டுள்ள டிரைலரில் “யாருகிட்ட தோத்தம்னு பார்க்க கூடாது, ஏன் தோத்தம்னு பார்க்கணும்” போன்ற வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரைலரே இப்படி அதிரடியாக இருப்பதால், படத்தில் நிச்சயம் இதைவிட பல அதிரடியான அம்சங்கள் நிறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அறிவு மற்றும் உமாதேவி பாடல்கள் எழுதியுள்ளனர். 

Related News

9448

‘மாண்புமிகு பறை’ திரைப்படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!
Monday November-10 2025

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...

’ரெட்ட தல’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Monday November-10 2025

பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...

’மாஸ்க்’ பட நிகழ்வில் நடிகை ஆண்ட்ரியா அழகை வர்ணித்த விஜய் சேதுபதி!
Monday November-10 2025

தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...

Recent Gallery