சிவகார்த்திகேயன் - நயந்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். 24 ஏஎம் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள இப்படத்தில் மலையாள முன்னணி ஹீரோ பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு மோகன் ராஜா இயக்கும் படம் என்பதாலும், மலையாள முன்னணி நடிகர் பகத் பாசில், இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருப்பதாலும், சிவகார்த்திகேயன் - நயந்தாரா முதல் முறையாக ஜோடி சேர்ந்திருப்பதாலும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இன்னும் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட உள்ள நிலையில், இப்படத்தின் சென்னை வெளியீட்டு உரிமையை எஸ்பிஐ சினிமாஸ் வாங்கியுள்ளது. இந்த தகவலை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...