Latest News :

ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நடந்த பிரமாண்ட சம்பவம்! - ‘சிங்கப்பூர் சலூன்’ கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!
Sunday January-14 2024

‘எல்.கே.ஜி’ மற்றும் ‘மூக்குத்தி அம்மன்’ என இரண்டு மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி கூட்டணி மூன்றாவது முறையாக ‘சிங்கப்பூர் சலூன்’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

 

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில், இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க, சத்யராஜ், லால், கிஷன் தாஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ஜீவா மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார்கள்.

 

அனைத்து பணிகளும் நிறைவடைந்து தற்போது வெளியீட்டு பணிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு, வரும் ஜனவரி 25 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘சிங்கப்பூர் சலூன்’ வெளியாகும் என்று அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின், தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிருவனம் மூலம் தமிழகம் முழுவதும் வெளியிட விருப்பம் தெரிவித்ததோடு, தொலைக்காட்சி உரிமத்தையும் தானே பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதுவே இப்படத்தின் முதல் வெற்றியாகும்.

 

இந்த நிலையில், படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் கூறிய நடிக ஆர்.ஜே.பாலாஜி, “ஐசரி சாருடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இது. இதுவரை நானே தான் என்னை இயக்கி கொண்டிருந்தேன், இப்போது தான் வேறு இயக்குநர்கள் இயக்கத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறேன். இது எனக்கு புதிய அனுபவமாக இருப்பதோடு பல விசயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. நான் இயக்கிய படங்கள்  அல்லது அறிமுக இயக்குநர்களின் படங்கள் என்று தான் என்னுடைய பயணம் இருந்தது. இந்த படத்தின் மூலம் தான் முதல் முறையாக அனுபவம் மிக்க இயக்குநருடன் பயணித்திருக்கிறேன். கோகுல் சார் இயக்கத்தில் நடித்ததன் மூலம் நான் பல விசயங்களை கற்றுக்கொண்டேன். இந்த கதையை அவர் என்னிடம் சொன்ன போது, எனக்கு கொஞ்சம் தயக்கமாக தான் இருந்தது. காரணம், இது மிகப்பெரிய படமாக இருந்தது, அதனால் எனக்கு சூட் ஆகுமா என்று யோசித்தேன். ஆனால், ‘ரன் பேபி ரன்’ படத்தில் என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதால், இந்த படத்திலும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை வந்தது. அதேபோல், தயாரிப்பாளர் ஐசரி சார் மற்றும் இயக்குநர் கோகுல் சார் கொடுத்த நம்பிக்கையால் இந்த படத்தில் நடித்தேன்.

 

இந்த படம் மக்களுக்கு தேவையான கமர்ஷியல் அம்சங்கள் உள்ளிட்ட அனைத்தும் கலந்தவையாக இருக்கும். இதில், நடிகர் ஜீவா மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். அதுமட்டும்  அல்ல, 

ஒரு பெரிய சர்ப்ரைஸ் ,ஒரு பெரிய நடிகர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவர் யார்? என்று இப்போது சொல்ல மாட்டோம். ஆனால், அதை பார்க்கும் போது உங்களுக்கு பயங்கர சர்ப்ரைஸாக இருக்கும். இந்த படத்தில் அனைத்து விசயங்களும் பேசியிருக்கிறோம், ஆனால் அரசியல் பேசவில்லை, சமூக கருத்துகளை மேலோட்டமாக சொல்லி இருக்கோம். முடிவெட்டுபவராக நடிப்பதற்காக ஹேர் ஸ்டைலிஷ்களிடம் பயிற்சிகள் பெற்றேன். அந்த விசயங்கள் படத்தில் நன்றாக வந்திருக்கிறது. நான் நடித்ததில் பொருளாதார ரீதியாகவும், கண்டெண்ட் ரீதியாகவும் இது மிகப்பெரிய படம், நிச்சயம் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

 

இயக்குநர் கோகுல் படம் குறித்து கூறுகையில், “நான் இதுவரை இயக்கிய படங்களிலேயே என் மனதுக்கு மிகவும் பிடித்த படம் இது தான். இந்த கதைக்கு நான் பாலாஜியை தேர்வு செய்ய காரணம், ஒரு தனிமனிதனாக அவர் ஒரு பெரிய இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். முதல் தலைமுறை வெற்றி என்பது சாதாரணமானதல்ல, அதை அடைய நிறைய தடைகளை தாண்டி வர வேண்டி இருக்கும்.  இந்த படத்தின் கதையும் அதை தான் சொல்கிறது, அதனால் தான் பாலாஜியை நான் தேர்வு செய்தேன். முடி வெட்டுவது என்பது ஒரு சாதாரண தொழிலாக இருந்தது, ஆனால் இப்போது அந்த தொழிலின் முன்னேற்றம் வேறு மாதிரியாக இருக்கிறது. அவர்கள் ஸ்டைலிஷாகவும், ஆடம்பரமாகவும் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலைக்கு அந்த தொழில் முன்னேறுவதற்கு ஒரு தனிமனிதன் போட்ட விதை தான் காரணமாக இருக்க வேண்டும். அதை தான் இந்த படம் சொல்கிறது. எந்த துறையாக இருந்தாலும் ஒரு தனிமனித முன்னேற்றம் சாதாரணமானதல்ல, அவன் பல விசயங்களை கடந்து வர வேண்டி இருக்கும், அதை தான் இந்த படம் பேசுகிறது. அதில் என்னுடைய வழக்கமான பாணியிலான காமெடி, செண்டிமெண்ட், காதல் என அனைத்து விசயங்களும் இருக்கும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் கூறுகையில், “’சிங்கப்பூர் சலூன்’ இதுவரைக்கும் நான் தயாரித்த திரைப்படங்களில் மிகப்பெரிய பொருட்ச் செலவில் தயாரித்த படம். ஆர். ஜே. பாலாஜியால இப்படியும் நடிக்க முடியுமா!, அப்படின்னு மக்கள் வியக்குற மாதிரியான ஒரு கதை அம்சம் கொண்ட படம், அவரும் அதுக்கு ஏத்த மாதிரி நடித்திருக்கிறார். எனக்கு இந்த கதை மேல் பெரிய நம்பிக்கை இருக்கிறது. முதல் பாதில் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து மகிழ வைக்கும் கதையாகவும்,  இரண்டாம் பாதி எமோஷன் மோட்டிவேஷன் இந்த மாதிரி  பல சுவாரசிய அம்சங்களை கொண்டதக இருக்கும். படம் சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

Related News

9453

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery