Latest News :

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Monday January-15 2024

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு  தேதியை , தனித்துவமான அறிவிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் படக்குழுவினர் கவர்ந்திருக்கிறார்கள். அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம், ஒரு அசாதாரணமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என உறுதி அளிக்கிறது. 

 

வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், சென்னை, மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கியத்துவம் வாய்ந்த மாநகரங்களில் 'கல்கி 2898 AD' படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். இதற்காக விஜயவாடாவில் நடைபெற்ற பிரத்யேக அணிவகுப்பு, பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இதன் போது தனித்துவமான மற்றும் அற்புதமான முறையில் படத்தின் வெளியீட்டை, இந்த ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி என உற்சாகமாக அறிவித்தனர்.

 

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனரும், திரைப்பட தயாரிப்பாளருமான சி. அஸ்வினி தத் ’கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு குறித்து கூறுகையில், “வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தனது ஐம்பதாவது ஆண்டை நிறைவு செய்யும் வகையில்.. எங்களுடைய சினிமா பயணத்தில் மே ஒன்பதாம் தேதியின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது. 'ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி' முதல் விருது பெற்ற 'மகாநதி' மற்றும் 'மகரிஷி' வரை இந்த தேதி எங்கள் வரலாற்றில் தனி இடத்தை பொறித்துள்ளது. இப்போது அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் போன்ற திறமையான நட்சத்திர கலைஞர்களுடன் தயாரான 'கல்கி 2898 AD' படத்தின் வெளியீடு எங்களுக்கு ஒரு சிறப்பான தருணத்தை குறிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் மைல் கல்லான ஐம்பதாவது ஆண்டுடன் இப்படம் இணைந்துள்ளது. மேலும் நாங்கள் எங்கள் பயணத்தை தொடரும்போது அதை இந்த திரைப்படம் மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது.” என்றார்.

 

இதனிடையே 'கல்கி 2898 AD' கடந்த ஆண்டு சான்- டியாகோவில் உள்ள காமிக்-கானில் அறிமுகம் செய்யும் போது உலகம் முழுவதும் பெரும் அதிர்வை உருவாக்கி, பாராட்டைப் பெற்றது. மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

 

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான 'கல்கி 2898 AD' ஒரு பன்மொழி திரைப்படமாகும். இது புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடைபெறும் அறிவியல் புனைவு படைப்பாகும்.

Related News

9454

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery