Latest News :

’சேத்துமான்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Friday January-19 2024

‘சேத்துமான்’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழ், பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ. வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். காதல் மற்றும் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் பேசப்பட்டுள்ளது.

 

இரவு- பகல் என ஒரேக்கட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு மைசூர், பெங்களூர், மாதேஸ்வரன் மலைப்பகுதிகள், தர்மபுரி, மேட்டூர் ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்றது. படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்திருக்க, பிந்துமாலினி- வேதாந்த் பரத்வாஜ் இசையமைத்துள்ளனர். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து  வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.

 

இப்படம் குறித்து கூறிய இயக்குநர் தமிழ், “நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி ,சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமரிசையாக சித்தரிக்கும் படம் இது.” என்றார்.

 

 'ஹிருதயம்', 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படப்புகழ் தர்ஷனா ராஜேந்திரன், 'கனா' புகழ் தர்ஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர்.  

 

தீபக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிந்துமாலினி, வேதாந்த் பரத்வாஜ் இசையமைத்துள்ளனர். கண்ணன் படத்தொகுப்பு செய்ய, பி.ஜெயமுருகன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். 

Related News

9457

‘மாண்புமிகு பறை’ திரைப்படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!
Monday November-10 2025

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...

’ரெட்ட தல’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Monday November-10 2025

பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...

’மாஸ்க்’ பட நிகழ்வில் நடிகை ஆண்ட்ரியா அழகை வர்ணித்த விஜய் சேதுபதி!
Monday November-10 2025

தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...

Recent Gallery