மோகன்லால் நடிப்பில் கடந்த மதம் வெளியான மலையாளப் படம் ’வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம்பெற்ற “ஜிமிக்கி கம்மல்...” பாடல் மூலம் கேரளா மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகியிருப்பவர்கள் ஷெரில் மற்றும் அன்னா.
கல்லூரி ஆசிரியைகளான இவர்கள், இந்த பாடலுக்கு ஆடிய நடனம் யுடியூப் மூலம் வைரலாக பரவியதை தொடர்ந்து இவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் குவிகின்றது. அதிலும், ஷெரில் என்பவர் நல்லா அம்சமாக இருப்பதால் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்துள்ளதாம்.
சினிமாவில் தனக்கு நடிக்க விருப்பம் தான், அதிலும் தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும், என்று ஷெரில் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், சென்னையில் வரும் அக்டோபர் 1415 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் ஷெரில் மற்றும் அன்னா இருவரும் “ஜிமிக்கி கம்மல்...” பாடலுக்கு நடனம் ஆடப்போகிறார்கள்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...