’புதிய பாதை’-யில் தொடங்கிய இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய முயற்சி தற்போதும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்று மூன்று தசாப்தங்களுக்கு மேல் வெற்றிகரமாக இயங்கி வரும் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ஒவ்வொரு புதிய முயற்சியையும் அவரால் மட்டுமே வீழ்த்த முடியும், என்பதை அவர் தனது ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறார். அந்த வகையில், அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியீட்டை புதிய முயற்சியாக நிகழ்த்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக கொண்ட சாகச திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘டீன்ஸ்’ (Teenz) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இராதாகிருஷ்ணன் பார்த்திபன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.சுதர்சன் படத்தொகுப்பு செய்கிறார்.
பயாஸ்கோப் ட்ரீம்ஸ் எல்.எல்.பி மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாராகியுள்ள இப்படத்தை கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் தயாரித்துள்ளனர். கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
இப்படத்தின் முதல் பார்வை மிகவும் வித்தியாசமான முறையில், உலக அளவில் முதல் முறையாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதிலும், உலகம் முழுவதும் தணிக்கை சான்றிதழோடு ஒரு திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாவதும் இது தான் முதல் முறை.
இது குறித்து கூறிய இராதாகிருஷ்ணன் பார்த்திபன், “வணக்கத்திற்குரிய ஆடியன்ஸ், எங்கள் திரைப்படத்தின் முதல் பார்வை அனுபவம் இதோ உங்களுக்காக. முதல் முறையாக சென்சார் சான்றிதழோடு இது வெளியாகியுள்ளது. டி.இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோர் உடனான எனது முதல் சிறந்த படைப்பாக இது இருக்கும்.
2024ம் ஆண்டின் முதல் மாதத்தின் 20ம் தேதியில் முதல் முறையாக திரையரங்குகளில் முதல் காட்சியின் இடைவேளையின் போது 'டீன்ஸ்' திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக என்னை ரசித்து வரும் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முந்தைய படைப்பான 'இரவின் நிழல்' தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களையும் பெற்று சாதனை படைத்த நிலையில், அவருடைய புதிய திரைப்படமான ‘டீன்ஸ்’ முதல் பார்வையே வித்தியாசமான வகையில் வெளியாக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பதால், இந்த படமும் திரையுலகில் முத்திரை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...