தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்புடன் நின்றுவிடாமல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மூலம் தொடர்ந்து படங்களை தயாரிக்கவும் செய்கிறார். சமீபத்தில் அவரது நிறுவனம் தயாரிக்கும் 10 வது படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இன்று அவர் நிறுவனம் தயாரிக்கும் 11 வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெற்றி படமான ‘கட்டா குஸ்தி’ படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இப்படத்தை இயக்குகிறார். குடும்ப பார்வையாளர்களை மகிழ்வித்ததோடு, விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த ’கட்டா குஸ்தி’ திரைப்படம், கடந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஜோடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது. மேலும் இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில், இந்தியாவில் கடந்த ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட மூன்றாவது படமாகவும், தமிழ் மொழியில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் படமாகவும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய வெற்றியைத் தந்த, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணி மீண்டும் இணைவது, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிகப்பெரும் பொருட்செலவில், முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும்.
இந்த புதிய திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள், தற்போது துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...