வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில், ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் பிரமாண்டமாக தயாரித்த படம் ‘விடுதலை - பாகம் 1’. இப்படம் வெளியாகி உலகளவில் வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், இதனுடன் சேர்ந்து இதன் இரண்டாம் பாகமும் பல்வேறு விருது விழாக்களில் பங்கேற்று பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.
விடுதலை - பாகன் 1 வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், வரும் ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற இருக்கும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘விடுதலை’ பாகம் 1&2 திரையிடப்பட தேர்வாகி மிகப்பெரிய அங்கீகாரம் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், மற்றொரு அங்கீகாரமாக புனே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘விடுதலை - பாகம் 1’ திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இது படக்குழுவினரையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்களிடம் மட்டும் இன்றி சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு அங்கீகாரங்களை பெற்று வரும் ‘விடுதலை - பாகம் 1’ போல், ‘விடுதலை - பாகம் 2’ படத்தையும் மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...