வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ் கையில் ஒரு டஜன் படங்கள் இருக்கிறது. இதுவரை அவர் நடித்து முடித்து வெளியீட்டுக்கு தயராக இருக்கும் படங்களின் எண்ணிக்கை மட்டும் ஐந்தாகும்.
மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ்குமார், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘100% காதல்’ படத்தில் நடிக்கிறார். இதில் ஜி.வி க்கு ஜோடியாக, ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிக்கிறார். இவர்களுடன் மயில்சாமியின் இரண்டாவது மகன் இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க, ஜெயசித்ராவும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
தெலுங்கில் இப்படத்தை இயக்கிய சுகுமார், தமிழில் தயாரிப்பை மட்டும் கவனிக்க, சந்திரமெளலி என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். படம் இயக்குவது சந்திரமெளலிக்கு இது தான் முதல் முறை என்றாலும், இவர் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதுவும் ஹாலிவுட் படங்கள். மேலும், இந்த படத்திற்கு நான்கு பேர் வசனங்கள் எழுதுகிறார்கள். இதில் ஒருவர் ஆண்டனி பாக்யராஜ்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது. இதில் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டு ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...