Latest News :

பாலிவுட்டில் தயாரிப்பாளராக களம் இறங்கும் இயக்குநர் அட்லீ!
Friday January-26 2024

'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என தமிழ் சினிமாவில் பிரமாண்ட திரைப்படங்கள் மூலம் மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்த இயக்குநர் அட்லீ, கடந்த ஆண்டில் ஷாருக்கானின் ‘ஜவான்’ மூலம் பாலிவுட்டில் இயக்குநராக களம் இறங்கி மிகப்பெரிய வெற்றி பெற்றார். தனது முதல் படத்திலேயே ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய திரைப்படத்தை இயக்கியவர் என்ற சாதனையை நிகழ்த்தி பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

 

இந்த நிலையில், பாலிவுட்டில் இயக்குநராக வெற்றி பெற்ற அட்லீ, தற்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். இயக்குநர் அட்லீ தனது உதவியாளர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்காக ’ஏ ஃபார் ஆப்பிள்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அந்நிறுவனம் மூலம் ‘சங்கிலி புங்கிலி கதவை திற’ மற்றும் ‘அந்தகாரம்’ என்ற இரண்டு வெற்றி படங்களையும் தயாரித்தவர், தற்போது தனது நிறுவனத்தின் மூலம் பாலிவுட் படத்தை தயாரிக்க தொடங்கியுள்ளார்.

 

இயக்குநர் ஏ.காளீஸ்வரன் இயக்கத்தில், பாலிவுட் நடிகர் வருன் தவான் நாயகனாக நடிக்க, நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தை இயக்குநர் அட்லீ தயாரிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை தற்போது 'VD18' என்று அழைக்கின்றனர். இதில், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1‌ ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

 

இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Related News

9483

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...