விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘ரோமியோ’ திரைப்படத்தை வரது சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். இப்படத்தின் மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரிக்கும் வகையில், படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் படன் என்றாலே மக்களிடமும், திரையுலகினரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு காரணம், மக்களை கவரும் வகையிலான படங்களையும், தரமான கமர்ஷியல் படங்களையும் அந்நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருவது தான்.
இந்த நிலையில், தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனி படங்கள் என்றாலே வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவருடன் ரெட் ஜெயண்ட் நிறுவன்ம கைகோர்த்திருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.
’காதல் டிஸ்ஹன்சிங்’ மற்றும் ‘ஐ ஹேட் யூ, ஐ லவ் யூ’-ன் மூன்றாவது எபிசோட் போன்ற யூடியூப் சீரிஸ் மூலம் புக பெற்ற விநாயக் வைத்தியநாதன் இயக்கியிருக்கும் இப்படத்தில் மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி என பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

’பத்துதல’ படத்தின் அட்டகாசமான காட்சியமைப்பிற்காகப் பாராட்டப்பட்ட ஃபரூக் ஜே பாஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் தனசேகர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எஸ் கமல நாதன் கலை இயக்குநராகவும், விஜய் ஆண்டனி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தெலுங்கு பதிப்புக்கு ‘லவ் குரு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...