Latest News :

புதிய முயற்சியில் இறங்கிய நடிகர் ஜீவா!
Wednesday January-31 2024

தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சூப்பர் குட் பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் நிறுவனம் ஆர்.பி.செளத்ரி, மூலம் இயக்குநர்களாக அறிமுகமனாவர்கள் ஏராளம். தற்போது வரை சுமார் 98 திரைப்படங்களை தயாரித்திருக்கும் ஆர்.பி.செளத்ரி, பெரும்பாலும் அறிமுக இயக்குநர்களுக்கு தான் வாய்ப்பளித்திருக்கிறார். அதனாலேயே மற்ற நிறுவனங்களுக்கு இல்லாத பெருமை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு உண்டு.

 

இந்த நிலையில், தனது தந்தையின் வழியில் பயணிக்க தொடங்கியிருக்கும் நடிகர் ஜீவா, தனது தந்தை எப்படி திறமையாளர்களை அறிமுகப்படுத்துவதை நோக்கமாக கொண்டிரு பயணிக்கிறாரோ அதுபோல், திறமையானவர்களுக்கான சரியான தளத்தை உருவாக்கி கொடுப்பதற்கான புதியதொரு களத்தை உருவாக்கியுள்ளார்.  ஆம், நடிகர் ஜீவா ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ (Deaf Frogs Records) என்ற தளத்தை உருவாக்கி அதன் மூலம் சுயாதீன இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்புகளை பெற்றுத்தருவதோடு, திரைத்துறையைச் சார்ந்த திறமையுள்ளவர்களுக்கான களத்தையும் உருவாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

‘டெஃப் ஃப்ராக்ஸ்’ (Deaf Frogs Records) நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் பிரமண்டமாக நடைபெற்றது. இதில், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ்,ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால்,மிர்ச்சி சிவா,விச்சு விஸ்வநாத்,விவேக் பிரசன்னா, கலையரசன்,ஆதவ் கண்ணதாசன், ஜெகன்,இயக்குனர் மோகன்.ஜி, நடிகர்  மற்றும் இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, சித்தார்த் விபின், சந்தோஷ் நாராயணன் மற்றும் பல பிரபலங்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

 

நிகழ்வில் நடிகர் ஜீவா பேசுகையில், “கடந்த ஒரு வருடமாக இந்த 'டெஃப் ஃப்ராக்ஸ்' மியூசிக் லேபிள் நிறுவனத்திற்காக என்னென்ன தயாரிப்புகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்பதை இன்று வெளியிடுகிறோம்.மேலும் இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்களுக்கான பாடல்கள் மற்றும் குறும்படங்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. எங்களது தாய் நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக 40-க்கும்மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது போல இந்த நிறுவனம் மூலம் சுயாதீன  கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களின் கூறிய சிறுகதையின் அடிப்படையில் 'யார் சொல்வததையும் கேட்காமல் நமது வேலையை நாம் செய்து கொண்டே முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்' என்பதை அடிப்படையாக வைத்து இந்நிறுவனத்திற்கு 'டெப்ஃ ஃப்ராக்ஸ்ஜீவா பேசும் பொழுது "கடந்த ஒரு வருடமாக இந்த 'டெஃப் ஃப்ராக்ஸ்' மியூசிக் லேபிள் நிறுவனத்திற்காக என்னென்ன தயாரிப்புகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்பதை இன்று வெளியிடுகிறோம்.மேலும் இந்த நிறுவனம் சுயாதீன கலைஞர்களுக்கான பாடல்கள் மற்றும் குறும்படங்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. எங்களது தாய் நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் வாயிலாக 40-க்கும்மேற்பட்ட புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது போல இந்த நிறுவனம் மூலம் சுயாதீன  கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களின் கூறிய சிறுகதையின் அடிப்படையில் 'யார் சொல்வததையும் கேட்காமல் நமது வேலையை நாம் செய்து கொண்டே முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்' என்பதை அடிப்படையாக வைத்து இந்நிறுவனத்திற்கு 'டெப்ஃ ஃப்ராக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கலைக்கூடராமாக இருக்கும்.” என்றார்.

Related News

9488

‘மாண்புமிகு பறை’ திரைப்படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!
Monday November-10 2025

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...

’ரெட்ட தல’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Monday November-10 2025

பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...

’மாஸ்க்’ பட நிகழ்வில் நடிகை ஆண்ட்ரியா அழகை வர்ணித்த விஜய் சேதுபதி!
Monday November-10 2025

தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...

Recent Gallery