’பொன்னியின் செல்வன்’ புகழ் சோபிதா துலிபாலா ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ‘மங்கி மேன்’ படத்தின் டிரைலர் வெளியானது!
Friday February-02 2024

‘பொன்னியின் செல்வன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சோபிதா துலிபாலா, ‘மேட் இன் ஹெவன்’ மற்றும் ‘தி நைட் மேனேஜர்’ போன்ற ஹிந்தி வெப் தொடர்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்தார். 

 

அனுராக் காஷ்யப் இயக்கிய அவரது முதல் படமான ‘ராமன் ராகவ் 2.0’ படத்தில் அவரது நடிப்பு, கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான பரிந்துரையை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டார். மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ‘குரூப்’ மற்றும் தெலுங்கில் ‘கூடாச்சாரி’, ‘மேஜர்’ போன்ற வெற்றிப் படைப்புகளை வழங்கிய சோபிதா, தற்போது இந்திய சினிமாவை கடந்து, சர்வதேச திரையுலகில் அறிமுகமாகிறார்.

 

தேவ் படேல் இயக்கிய ஆஸ்கார் விருது பெற்ற ஜோர்டான் பீலேவுடன் இணைந்து யுனிவர்சல் பிக்சர்ஸின் தயாரிப்பான ’மங்கி மேன்’ என்ற த்ரில்லர் படத்தின் மூலம் சோபிதா துலிபாலா ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். ’விப்லாஷ்’ போன்ற விருது பெற்ற திரைப்படங்களில் பணியாற்றி, அவரது பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஷரோன் மேயர், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  

 

சமீபத்தில் வெளியான ’மங்கி மேன்’ திரைப்படத்தின் டிரைலர் உலக அளவில் கவனம் ஈர்த்து டிரெண்டாகி வரும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

 


Related News

9492

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery