Latest News :

சிரஞ்சீவிக்கு ஜோடியான நடிகை திரிஷா!
Monday February-05 2024

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் ‘விஸ்வம்பரா’ படம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்படுகிறது. சில நாட்களுக்குப் முன்பு இப்படத்திற்காக அமைக்கப்பட்ட பிரமாண்டமான செட்டில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சிரஞ்சீவில் கலந்துக்கொண்ட நிலையில், இப்படத்திற்காக மேலும் 13 பிரமாண்டமான செட்களை படக்குழு அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

 

இந்த நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தகவலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று நடைபெற்ற இப்படப்பிடிப்பில் நடிகை திரிஷா கலந்துக்கொள்ள, அவரை நடிகர் சிரஞ்சீவி, இயக்குநர் வசிஷ்டா, தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

 

முன்னதாக நடிகை திரிஷா, மெகா ஸ்டார்  சிரஞ்சீவியுடன் ‘ஸ்டாலின்’ படத்தில் பணிபுரிந்துள்ளார். தற்போது மெகா மாஸ் ஃபேண்டஸி உலகை காட்டும்  ’விஸ்வம்பரா’ படத்தில், சிரஞ்சீவியுடனான மேஜிக் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்க்கலாம்.

 

யுவி கிரியேஷன்ஸ் சார்பில் விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து  பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் இணை திரைக்கதையாசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.

 

2025 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக ஜனவரி 10 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

Related News

9498

‘மாண்புமிகு பறை’ திரைப்படத்திற்கு கிடைத்த மற்றொரு சர்வதேச அங்கீகாரம்!
Monday November-10 2025

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...

’ரெட்ட தல’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Monday November-10 2025

பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...

’மாஸ்க்’ பட நிகழ்வில் நடிகை ஆண்ட்ரியா அழகை வர்ணித்த விஜய் சேதுபதி!
Monday November-10 2025

தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...

Recent Gallery