கன்னட சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஹேமந்த் எம்.ராவ், ‘சப்த சாகராச்சே எல்லோ’ மற்றும் ‘சைட் ஏ சைட் பி’ படங்கள் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர். தற்போது கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருடன் அவர் கைகோர்த்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.ஜே.எஃப் வைஷாக் ஜெ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் வைஷாக் ஜெ.கவுடா இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் ஹேமந்த் எம்.ராவ் கூறுகையில், “ஒரு நடிகராக சிவராஜ்குமார் சாரின் அனுபவம் மிகப்பெரியது, அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு இயக்குநராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது 5வது படத்தில் லெஜண்ட் டாக்டர் சிவராஜ்குமாருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் பெருமையாக உள்ளது. நான் எப்போதுமே ஒவ்வொரு படத்தையும் என்னுடைய முதல் மற்றும் கடைசிப் படம் போல நினைத்தே பணியாற்றிவருகிறேன்; #VaishakJGowda இந்த பயணத்தை மேற்கொள்வதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அறிமுக தயாரிப்பாளரான வைஷாக் ஜெ. கவுடா கூறுகையில், “சிறுவயதில் இருந்தே நான் சிவண்ணாவின் தீவிர ரசிகன். அவர் நடிக்கும் ஒரு படத்தின் மூலம் நான் திரையுலகில் நுழைய வேண்டும் என்று விரும்பினேன். எங்கள் முதல் திரைப்படத்திற்காக ஹேமந்த் M ராவ் மற்றும் சிவண்ணாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு படத்தை வழங்க வேண்டிய பொறுப்பு, இப்போது எங்களுக்கு பத்து மடங்காக அதிகரித்துள்ளது.” என்றார்.
படம் குறித்த மற்ற தகவல்களை ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...