Latest News :

குவியும் வாய்ப்புகள் - குஷியில் பிரியா ஆனந்த்
Tuesday August-01 2017

‘எதிர் நீச்சல்’, ‘வணக்கும் சென்னை’, ‘வை ராஜா வை’ என்று தொடர் படங்களை கொடுத்து வந்த பிரியா ஆனந்த், திடீரென்று சில மாதங்கள் காணாமல் போன நிலையில், சமீபத்தில் வெளியான ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்தின் முழு வெளிச்சத்தையும் தன் மீது பட வைத்துள்ளார்.

 

“இனி நடிக்க கூடாது என்று இருந்த எனது முடிவு மாற்றும் வகையில் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதை இருந்தது” என்று பேட்டியில் பிரியா ஆனந்த் கூறியது, வெறும் வாய் வார்த்தை அல்ல, என்பதை அப்படமும், அப்படத்தில் பிரியா ஆனந்தின் கதாபாத்திரமும் நிரூபித்து விட்டது. தற்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை பார்ப்பவர்கள் பிரியா ஆனந்தை வாழ்த்த தவறுவதில்லை, அந்த அளவுக்கு தனது ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவருக்கு பாராட்டுக்களுடன் பட வாய்ப்புகளும் குவிந்து வருவதால், குஷியடைந்துள்ளவர் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு, இது  போன்ற சமூக கருத்துக்களை மக்களுக்கு சொல்லும் படங்களில் நடிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Related News

95

’மை லார்ட்’ மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது! - மகிழ்ச்சியில் சசிகுமார்
Thursday February-19 2026

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது   சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது...

முதல் பார்வையை வெளியிட்ட ’அச்சுத அவதாரம்’ படக்குழு!
Thursday February-19 2026

நவீன சைபர் குற்றத் த்ரில்லர் அம்சங்களையும், பாரம்பரிய உணர்வுகளையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சுத அவதாரம்’...

’ஹாட் ஸ்பாட் 2’ இயக்குநருக்கு கிடைத்த வெற்றி பரிசு!
Thursday February-19 2026

கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் 'ஹாட்ஸ்பாட் 2 ' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது...

Recent Gallery