அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Tuesday February-06 2024

’கனா’ மற்றும் ’நெஞ்சுக்கு நீதி’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ், சமீபத்தில் ’லேபிள்’ என்ற இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்தார். சொல்லப்படாத களத்தில் அருமையான கருப்பொருளை பேசி  பெரும் பாராட்டுக்களைக் குவித்தவர், தற்போது விஷ்ணு விஷால் உடன் இணைந்துள்ளார்.

 

தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான வெற்றிப்படைப்புகள் தந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் விஷ்ணு விஷால். சூப்பரஸ்டார் ரஜினியுடன் இணைந்து அவர் நடித்துள்ள ’லால் சலாம்’ வெளிவரவுள்ள நிலையில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உடனான அவரது கூட்டணி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

தமிழ் திரையுலகில் பல தரமான வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வழங்கியதுடன், பல ப்ளாக்பஸ்டர் படங்களை வெளியிட்டுள்ள  ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல், இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார்.

 

இப்படத்தின் தலைப்பு, படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Related News

9503

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery