’மெட்ராஸ்காரன்’ படத்தில் இணைந்த நடிகை நிஹாரிகா!
Tuesday February-06 2024

‘ரங்கோலி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வாலி மோகன் தாஸ், இயக்கும் இரண்டாவது படத்திற்கு ‘மெட்ராஸ்காரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகாம் மற்றும் கலையரசன் நாயகர்களாக நடிக்கிறார்கள். 

 

புதுமையான த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நாயகியாக நிஹாரிகா ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மூத்த சகோதரரான நாகேந்திர பாவின் மகளான நிஹாரிகா, விஜய் சேதுபதி மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

 

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம்.  ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார். 

 

மலையாளத்தில் புகழ்பெற்ற ’கும்பளாங்கி நைட்ஸ்’, ’ஆர் டி எக்ஸ்’, ’இஷ்க்’ படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். ஷேன் நிகாம் ஜோடியாக நிஹாரிகா நடிக்கிறார். 

 

தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related News

9505

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery