சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று திருவையாறு காவிரி கரையில் நடைபெற்றது.
தகுந்த முன் அனுமதியோடு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் புரோகிதர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வை நடத்தியுள்ளார்கள். அதன் பிறகு படப்பிடிப்பு குழுவினர் நூற்றுக்கனக்கான நடன கலைஞர்களோடு பாடல் காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தார்கள்.
இதையடுத்து, அப்பகுதியில் மேலும் சில திதி கொடுக்க வந்துக்கொண்டிருந்த நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, திதி கொடுக்க வந்தவர்களை படக்குழு தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் புரோகிதர்களுக்கும், படக்குழுவினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புரோகிதர்கள் தங்களது சங்கத்தின் மூலம் போலீசில் புகார் அளிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படப்பிடிப்பை 12 மணிக்கு மேல் வைத்துக்கொள்ளும்படியும், யாருக்கும் தொந்தரவு இல்லாமலும் நடத்துமாறு படக்குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் திரையுலகில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...