Latest News :

புதியவர்களின் வாய்ப்பிற்கான பாலமாக உருவாகியுள்ள ‘ஸ்டார்டா’!
Friday February-09 2024

சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளப்பக்கங்கள் மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் புதிய கலைஞர்களின் இலக்கு எண்ணவோ திரைத்துறை தான் என்றாலும், அதற்கான சரியான பாதையில் பயணிப்பவர்கள் மிக மிக குறைவு. இதற்கு காரணம் அவர்களுக்கான சரியான களம் கிடைக்காமல் போவது தான். இந்த நிலையை மாற்றி, புதியவர்கள் தங்களது திறமைகளுக்கு ஏற்ற சரியான வாய்ப்பை பெற்றுத்தரும் பாலமாக உருவாகியுள்ளது ‘ஸ்டார்டா’ என்ற பிளாட்ஃபார்ம்.  (STARDA) 

 

இந்த ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்மின் விளம்பர தூதராக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் பொறுப்பேற்றுள்ளார். இதன் அறிமுக விழா நேற்று மாலை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில், ஜி.வி.பிரகாஷ் குமார்,  பாடகர்- பாடலாசிரியர்- நடிகர்- இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ரமேஷ் திலக், நடிகை நிவேதிதா சதீஷ், நடிகரும், தொகுப்பாளருமான அபிஷேக் ராஜா, நடிகர் ஷ்யாம் குமார், தயாரிப்பாளர்கள் சி. வி. குமார், தனஞ்ஜெயன், திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

ஸ்டார்டா பற்றி அதன் விளம்பர தூதர் ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், “நரேஷ் மற்றும் அவருடைய குழுவினருக்கு வாழ்த்துகள். நான் சிறிய வயதிலிருந்தே திரைத்துறையில் பணியாற்றி வருகிறேன். நிறைய புது இளம் திறமையாளர்களுடன் பணிபுரிந்து வந்திருக்கிறேன். வெற்றிமாறன், அட்லீ, ஏ. எல். விஜய், என பல புது இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். நான் இதுவரை இருபத்திமூன்று படங்களில் நடித்திருக்கிறேன். இதில் பதினேழு படங்கள் புது இயக்குநர்கள் தான் இயக்கியிருக்கிறார்கள். நிறைய புதுமுக நடிகைகள், நிறைய புதுமுக பின்னணி பாடகர்கள், பாடகிகளுடன் பணியாற்றியிருக்கிறேன். 

 

குளிர்பான விளம்பரங்கள், சூதாட்ட விளம்பரங்கள்... போன்றவற்றிற்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் ஒத்துழைப்பதில்லை. ஆனால் பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக பணியாற்றியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ‘ஸ்டார்டா’பிளாட்ஃபார்மை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறன். இதன் பிராண்ட் அம்பாசிடராக பொறுப்பேற்றிருப்பதற்கும் மகிழ்கிறேன். 

 

பொதுவாக சினிமாவில் வாய்ப்பு தேடுவது எப்படி? என தெரியாது. மேனேஜரைப் பார்க்கவேண்டுமா? இயக்குநர்களை பார்க்கவேண்டுமா? அல்லது அவர்களது உதவியாளர்களை பார்க்கவேண்டுமா?  அலுவலத்திற்கு நேரடியாக செல்லவேண்டுமா? அது எங்கேயிருக்கிறது?  இப்படி நிறைய விசயங்கள் இன்றைய தேதி வரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. பாடல் எழுதும் பாடலாசிரியராகட்டும். பாடும் பாடகர்களாகட்டும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம்..எங்கு பார்க்கவேண்டும்? யாரை பார்க்கவேண்டும்? என்று  கேள்வி கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இதற்கு எல்லாம் பதிலாக இந்த பிளாட்ஃபார்ம் இருக்கிறது. இதை பெரிதும் வரவேற்கிறேன். ஏனெனில் இந்த பிளாட்ஃபார்மில் திறமைசாலிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் வீடியோவும் இடம்பெற்றிருக்கிறது. இது  பெரிய பெரிய திரைப்பட நிறுவனங்கள், இயக்குநர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் போன்றவர்களுக்கு  தங்களுக்கு தேவையான திறமையான கலைஞர்களை தேர்வு செய்ய பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். 

 

திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி தரும் பிளாட்ஃபாரமாக இந்த ‘ஸ்டார்டா’ இருக்கும் என எதிர்பாக்கிறேன். நிறைய பேருடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்துகின்ற இந்த பிளாட்ஃபார்மில் நானும் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என விரும்பினேன். அதனால் இந்த பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்பாசிடராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பிளாட்ஃபார்மின் மூலம் நிறைய பேருக்கு வாய்ப்புகிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நானும் என்னுடைய படங்களுக்கு இந்த பிளாட்ஃபார்மில்  உள்ள திறமைசாலிகளை தேர்வு செய்து வாய்ப்பளிக்க முயற்சிக்கிறேன். புதிய கலைஞர்களுக்கு இந்த பிளாட்ஃபார்ம் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என உறுதியாக நம்புகிறேன். இங்கு வருகைத்தந்த அனைவருக்கும் நன்றி.” என்றார். 

 

Starda

 

இதனைத் தொடர்ந்து ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்ம் தயாரிப்பில் அபிஷேக் ராஜா இயக்கத்தில் உருவான விளம்பர படங்கள் திரையிடப்பட்டன. இவையனைத்தும் சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் கலைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருந்தது.

 

இதன் பிறகு நடிகர் ஷ்யாம் குமார், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ரமேஷ் திலக், நடிகை நிவேதிதா சதீஷ் ஆகியோர் கலந்துகொண்ட குழு விவாதமும் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அவர்கள் திரைத்துறையில் நுழைவதற்காக எதிர்கொண்ட சவால்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள். தங்களது அனுபவத்தை பகிர்ந்துகொண்ட போது.. அது திரைத்துறையில் அறிமுகமாகி சாதிக்கவேண்டும் என எண்ணுபவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9511

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

Recent Gallery