விக்ரமுடன் முதல் முறையாக கைகோர்த்த எஸ்.ஜே.சூர்யா!
Tuesday February-13 2024

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் யு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை எச்.ஆர் பிக்சரஸ் நிறுவனம் சார்பில் ஷிபு தமீன்ஸ் மகள் ரியா ஷிபு தயாரித்து வருகிறார்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘சீயான் 62’ என்று வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் பற்றிய புதிய தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், இப்படத்தில் மிக முக்கியமான, இதுவரை நடித்திராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்பது தான்.

 

சமீபகாலமாக, எந்த வேடம் கொடுத்தாலும், அதில் தனது அதீத நடிப்பு திறமையை காட்டி அசத்தும் எஸ்.ஜே.சூர்யா, தன்னை ஒரு நடிப்பு அரக்கனாக அடையாளப்படுத்திக் கொண்டார்.  அவர் இந்த படத்தில் இணைந்திருப்பதும்,  நடிப்பு ராட்சசனான விக்ரமுடன் அவர் முதல் முறையாக கைகோர்த்திருப்பதும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

9518

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

Recent Gallery