’எட்டுத் தோட்டாக்கள்’ வெற்றி நாயகனாக நடிக்கும் படம் ‘ஆலன்’. 35 பிக்சர்ஸ் சார்பில் சிவா.ஆர் தயாரித்து, இயக்கும் இப்படம் தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவில் பல பகுதிகளில் படமாக்கபப்ட்டு வந்த நிலையில், இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
ஒரு முழுமையான காதல் திரைப்படமாக மட்டும் இன்றி வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா நிகழ்வு, அவனின் காதல், 40 வரையிலான அவனது வாழ்வின் பயணத்தைப் பற்றி பேசுகிறது.
ஆலன் என்றால் படைப்பாளி என்று அர்த்தம். வாழ்வின் எதிர்பார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா.ஆர்.
வெற்றி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த மதுரா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, ஹரீஷ் பெராடி, அருவி மதன்குமார், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், விரைவில் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது.
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...