‘விவேகம்’ படத்தால் பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருக்கும் அஜித், தற்போது முழுழ் ஒய்வில் இருக்கிறார். இதனால் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அடுத்த ஆண்டே அவர் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இருந்தாலும், அவரது அடுத்த படமும் சிவாவுடன் தான் என்று தகவல் வெளியாகியிருப்பதோடு, அப்படத்தை கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்க முன் வந்திருப்பதாகவும், சிவாவை அழைத்து அஜித் கதை ரெடி பண்ண சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹாலிவுட் ஸ்டைலில் படம் எடுக்கிறேன், என்ற பெயரில் ரசிகர்களுக்கு புரியாத ஒரு படத்தை எடுத்து பாடம் கற்றுக்கொண்ட அஜித், இந்த முறை உள்ளூர் லோக்கல் கதையாகவே இருக்கட்டும் என்று சிவாவிடம் கூறியதோடு, ‘வீரம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாமே, என்று யோசனையும் சொல்லியிருக்கிறாராம்.
அஜிதின் ‘வீரம் 2’ ஐடியா நல்லா தானே இருக்கு, கதைக்கும் ரொம்ப யோசிக்க வேண்டியதில்லை, பழைய வீரம் கதையை சற்று தூசு தட்டினாலே போதுமே!, என்று எண்ணிய சிவாவும் அஜித்தின் ஐடியாவுக்கு ஓகே சொல்லி வேலையை ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, இந்த முறையாவது அஜித் - சிவா கூட்டணி வெற்றி பெற்றால் சரி.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...